Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரயில்களில் இரவில் செல்போன் சார்ஜ் செய்ய தடை

ரயில்களில் இரவில் செல்போன் சார்ஜ் செய்ய தடை

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை

பகிரவும் WhatsApp Facebook

ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செல்போன் சார்ஜ் செய்வதை தடை செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து ரயில்வே வாரியம், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘ரயில்பெட்டிகளில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதியை நிறுத்தி வைக்க அறிவுறுத்தி இருந்தோம். ஆனால் அது சரிவர கடைபிடிக்கப்படவில்லை.


இந்நிலையில் சமீபத்தில் சில ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், பவர் பேங்க் போன்றவற்றை சார்ஜ் செய்யும் போது, அவை வெடித்து சிதறி தீப்பிடித்த நிகழ்வுகள் நடந்துள்ளன.
எனவே எல்லா ரயில்வே மண்டலங்களும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சார்ஜ் செய்யும் வசதி இரவு 11 முதல் காலை 5 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட ஊழியர்கள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதிப் படுத்த வேண்டும். அதிகாரிகளும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் ’’ என்று கூறப்பட்டுள்ளது.


எனவே இந்த சுற்றறிக்கையின் படி உடனடியாக ரயில்களில் இரவில் சார்ஜ் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகளுக்கு பாதிப்பு

இந்த உத்தரவால், இரவில் புறப்பட்டு காலையில் ஊர் போய்ச்சேருபவர்கள், அவசரத்துக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தும் பயணிகள், மடிக்கணினி மூலம் அலுவலக வேலை செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.


முந்தைய செய்தி
Credit card base expands 9.5% YoY, spending moderates on high base: Jefferies
அடுத்த செய்தி
புதிய ரூ.1,000 நோட்டு? - சமூக வலைத்தளங்களில் பரவும் போலி தகவல்

தொடர்புடைய செய்திகள்