Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

RBI தரவு மையத்தை திறைந்து வைத்த பிரதமர் மோடி

RBI தரவு மையத்தை திறைந்து வைத்த பிரதமர் மோடி

இந்த தரவு மையத்தில், முக்கியமான பணப் பரிவர்த்தனை மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பான அமைப்புகளும், ஆர்பிஐயின் பிற முக்கியத் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரூ.169 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய தரவு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஒடிசாவின் ஜட்னி பகுதியில் உள்ள இன்ஃபோ வேலி இரண்டாம் தொழில்நுட்பப் பூங்காவில் 18.55 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவு மைய திறப்பு விழா நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்

இந்த தரவு மையத்தில், முக்கியமான பணப் பரிவர்த்தனை மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பான அமைப்புகளும், ஆர்பிஐயின் பிற முக்கியத் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டில் டிஜிட்டல் நிதிச் சேவைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதுடன், அவற்றின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த இந்த மையம் உதவும்.

தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்துள்ள இந்தியாவின் நிதிப் பொருளாதார வளர்ச்சிக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் அடித்தளமாகவும் இது அமையும்.

இதுதவிர, இணையப் பாதுகாப்பு மற்றும் நிறுவனத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகள், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காகச் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நிதித் துறை முழுவதும் இணையவழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான திறன்களை மேம்படுத்தும் பிரத்யேக நிறுவனமாக இது செயல்படும்.

இந்த மையம், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில், நில அதிர்வு அபாயம் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் இருந்து தொலைவில் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையின் நவி மும்பையில் உள்ள தரவு மையத்துக்கு அடுத்தபடியாக, ஜட்னியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் நாட்டின் இரண்டாவது ஆர்பிஐ தரவு மையமாக இருக்கும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.

முந்தைய செய்தி
தாமரையுடன் கூடிய விளக்கு பரிசு: தனுஷ் அரசியல் பேசாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
அடுத்த செய்தி
பாதரசத்தில் இருந்து தங்கம் - அமெரிக்க நிறுவனம் முயற்சி!

தொடர்புடைய செய்திகள்