Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தாமரையுடன் கூடிய விளக்கு பரிசு: தனுஷ் அரசியல் பேசாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

தாமரையுடன் கூடிய விளக்கு பரிசு: தனுஷ் அரசியல் பேசாததால் ரசிகர்கள் ஏமாற்றம்

இரு மாதங்களுக்கு முன் தன் பிறந்தநாளையொட்டி, தனது ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து நலத்திட்ட உதவிகளை தனுஷ் வழங்கினார்.

பகிரவும் WhatsApp Facebook

சென்னையில் நடந்த மகளிரணி சந்திப்பு நிகழ்வில் நடிகர் தனுஷ் அரசியல் பேசாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்த நிகழ்வில் பங்கேற்ற பெண்களுக்கு தனுஷ் பரிசாக வழங்கிய வெள்ளி காமாட்சி விளக்கின் அடிப்பகுதியில் தாமரை இடம் பெற்று இருந்தது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நடிகர் விஜய் தவெக கட்சியைத் தொடங்கி ஆட்சி அமைத்தபின், தமிழ் திரையுலகில் பலருக்கும் அரசியல் ஆசை எழுந்துள்ளது. நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்கள் ரசிகர்களை அழைத்து பிரமாண்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இந்த வகையில் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக பெயர் மாற்றியுள்ளார். அரசியல் கட்சிகளைப்போல இந்த அமைப்பில், மகளிரணி, இளைஞரணி, தொழிலாளர் அணி என பல பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இரு மாதங்களுக்கு முன் தன் பிறந்தநாளையொட்டி, தனது ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து நலத்திட்ட உதவிகளை தனுஷ் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக சென்னை ஓஎம் ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று மகளிரணி நிர்வாகிகளைச் சந்திக்க தனுஷ் அழைப்பு விடுத்து இருந்தார். கடந்த இரு மாதமாக நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்றும், தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால் மகளிரணி விழாவில் தனுஷ் அரசியல் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் திரண்டனர். காலை 11 மணிக்கு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மழை மற்றும் தனுஷ் வருகை காரணமாக மாலையில் விழா நடந்தது. நிகழ்ச்சியில், தனுஷ் தனது திரைப்பட பாடல் ஒன்றை பாடிவிட்டு, “உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்” என்று மட்டும் தெரிவித்து தனது பேச்சை நிறைவு செய்தார். இதனால் ரசிகர்களும், பெண்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனைத் தொடர்து ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து அவர்களுக்கு 20 கிராம் எடை கொண்ட வெள்ளி காமாட்சி விளக்கு வழங்கினார். அந்த விளக்கின் அடிப்பகுதியில் தாமரை இடம்பெற்று இருந்தது விவாதப் பொருளாகி உள்ளது. பாஜக ஆதரவுடன் அவரது அரசியல் பிரவேசம் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 9,000 பதிவு செய்யப்பட்ட தனுஷ் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. மாநிலம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்கள், மண்டலவாரியாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இது அவரது அரசியல் வருகைக்கான ஒத்திகையாகவே கருத வேண்டியுள்ளது. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா 2015-ல் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவர் ஆக்டீவ் அரசியலில் இல்லை என்றாலும், பாஜகவை விட்டு விலகவில்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் தனுஷ் படத்திற்கு இரு விருதுகளை மத்திய அரசு வழங்கியது கவனிக்கத்தக்கது. சிவ பக்தரான தனுஷின் ஆன்மிக நாட்டத்தையும், அரசியலையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, தனுஷின் அரசியல் பின்னணியில் பாஜக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
ஆரோக்கியமற்ற உணவு - ரத்தக் கொழுப்பு அதிகரிக்கும் அபாயம்
அடுத்த செய்தி
RBI தரவு மையத்தை திறைந்து வைத்த பிரதமர் மோடி

தொடர்புடைய செய்திகள்