Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பொதுத்துறை வங்கிகளில் பங்கை 75%-ஆக குறைக்க மத்திய அரசு தீவிரம்

பொதுத்துறை வங்கிகளில் பங்கை 75%-ஆக குறைக்க மத்திய அரசு தீவிரம்

அரசின் பங்குகளைப் படிப்படியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நான்கு பொதுத்துறை வங்கிகளில் தனது பங்குகளை 75 சதவீதமாக குறைப்பதுடன், இரண்டு வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

செபி விதிகளின்படி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் 25 சதவீதப் பங்குகள் பொதுமக்களிடம் இருக்க வேண்டும். இந்த விதிமுறைக்கு இணங்க, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகளில் தனது பங்குகளை 75 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த ஓராண்டுக்குள் மேற்கண்ட நான்கு வங்கிகளில், அரசின் பங்குகளைப் படிப்படியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இதற்காக, சம்பந்தப்பட்ட வங்கிகள் தங்களது நிதித் தேவைகள் மற்றும் வணிக உத்திகளுக்கு ஏற்ப சந்தையில் புதிய பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டலாம். அதேநேரத்தில், சந்தை நிலவரங்களுக்கேற்ப அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் பரிசீலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுமக்களிடம் பங்குகளின் புழக்கம் அதிகரிப்பது, இந்த வங்கிகளின் சந்தை மதிப்பீட்டை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகள் ஒருங்கிணைப்பு

நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, மூன்று முதல் நான்கு பெரிய வங்கிகளை உருவாக்குவதே மத்திய அரசின் நீண்டகால நோக்கமாக உள்ளது. இதனை எட்டும் வகையில், பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, மேலும் இரண்டு வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருகிறது. வங்கிகளின் தொழில்நுட்பக் கட்டமைப்பு, அமைவிடம் மற்றும் வணிகத்தின் தன்மை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்புக்கான வாய்ப்புகள் மதிப்பிடப்படும். இந்தச் செயல்முறை தொடர்பாக வங்கிகளிடமிருந்தும் ஆலோசனைகள் பெறப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் மயமாக்கல்

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ஐடிபிஐ வங்கியைத் தவிர்த்து இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசு அறிவித்திருந்தது.இதில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றைத் தனியார்மயமாக்குவதற்கான சாத்தியமுள்ள வங்கிகளாக நிதி ஆயோக் தேர்வு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.


இதனிடையே, சமீபத்தில் கனடாவைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீதப் பங்குகளை ரூ.52,878 கோடிக்கு வாங்குவதற்கான நடவடிக்கைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தொடங்க ஆலோசித்து வருகிறது.

சட்டத் திருத்தங்கள் தேவை

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கு, வங்கிகள் தேசியமயமாக்கல் தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக, வங்கி நிறுவனங்கள் ( கையகப்படுத்துதல் மற்றும் மாற்றுதல்) சட்டத்தில் மாற்றங்கள் தேவைப்படலாம். இந்தச் சட்டத் திருத்தங்களை வங்கிகள் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையுடன் இணைத்துச் செயல்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச பொதுப் பங்கு விகிதமான 25 சதவீத விதிமுறையிலிருந்து மத்திய அரசு அளித்திருந்த விலக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அமலில் இருந்தது. இந்த விலக்கை மேலும் நீட்டிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
ரூ.1.26 லட்சத்திற்கு சின்ன வெங்காயம் ஏலம்
அடுத்த செய்தி
CSB வங்கியின் Q2 நிகர லாபம் 22% உயர்வு

தொடர்புடைய செய்திகள்