Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

CSB வங்கியின் Q2 நிகர லாபம் 22% உயர்வு

CSB வங்கியின் Q2 நிகர லாபம் 22% உயர்வு

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 22% உயர்ந்து ரூ.183 கோடியாக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சிஎஸ்பி வங்கியின் நிகர லாபம், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 22% உயர்ந்து ரூ.183 கோடியாக உள்ளது.

கேரளாவின் திருச்சூரைத் தலைமையிடமாக கொண்ட தனியார் துறை வங்கியான சிஎஸ்பி வங்கியின் நிகர வட்டி வருவாய் (NII) கடந்த ஆண்டு இதே காலாண்டின் ரூ.424 கோடியிலிருந்து 20% உயர்ந்து ரூ.510 கோடியாக உள்ளது.


 இதேபோல, செயல்பாட்டு லாபம் முந்தைய காலாண்டின் ரூ.251 கோடியிலிருந்து 10% அதிகரித்து ரூ.276 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் வாராக்கடன் விகிதமும் மேம்பட்டுள்ளது. மொத்த வாராக்கடன் 1.58% ஆகவும், நிகர வாராக்கடன் 0.33% ஆகவும் குறைந்துள்ளது. மேலும், தங்கக் கடன் பிரிவில் 36% சதவீதமும், மொத்த வங்கிச் சேவைக் கடன் பிரிவில் 44 சதவீதமும் ஆண்டு வளர்ச்சியை வங்கி பதிவு செய்துள்ளது.


இதனிடையே, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் முக்கிய வணிகப் பிரிவுகளில் வளர்ச்சியை மேலும் அதிகரித்து, நடுத்தர அளவிலான வங்கியாக உருவெடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக சிஎஸ்பி வங்கி தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
பொதுத்துறை வங்கிகளில் பங்கை 75%-ஆக குறைக்க மத்திய அரசு தீவிரம்
அடுத்த செய்தி
சபரிமலை சீசன் - கலர் வேட்டி உற்பத்தி மும்முரம்

தொடர்புடைய செய்திகள்