Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்திய ரூபாய் எங்கு செல்கிறது? ரிசர்வ் வங்கி சொல்வதென்ன!

இந்திய ரூபாய் எங்கு செல்கிறது? ரிசர்வ் வங்கி சொல்வதென்ன!

டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழந்து வருவதற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகள் அதிகரித்ததே காரணம்.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் கடந்த ஒரு வாரத்தில் 1.81 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், 2026-ல் ரூபாய் வீழ்ச்சி 6 சதவீதமாக உள்ளது. டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழந்து வருவதற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகள் அதிகரித்ததே காரணம்.

பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) வெளியேற்றம், அமெரிக்காவில் அதிகரிக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை கரன்சிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் முன்னேற்றம் இல்லை.
சில மாதங்களுக்கு முன்பு எடுத்த பெரிய முயற்சி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக அதிக வட்டியுடன் எப்சிஎன்ஆர் (பி) திட்டம் அறிவிக்கப்பட்டதுதான். 


இதன் மூலம் 127 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் வந்தது. அது ரூபாயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய முன்னேற்றம் இல்லை. இதனால்தான் கடந்த 10-ம் தேதி ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை கொண்டு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
நடப்பாண்டு ரூபாய் மதிப்பு 6 சதவீத இழப்புடன், டாலருக்கு எதிராக 96.96 என்ற முந்தைய குறைந்தபட்ச அளவைத் தாண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் ரூபாய் 94.89-ஆக வலுப்பெற்றது குறிப்பிடதக்கது. இந்த வாரத்தில்1.81% உயர்ந்துள்ளது.


என்ன நடவடிக்கைகள்?

கச்சா எண்ணெயைப் பொறுத்தவரை நாம் இறக்குமதியையே நம்பி இருக்கிறோம். அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு (IOCL, BPCL, HPCL) நேரடியாக அமெரிக்க டாலர்களை வழங்கும் ஸ்பெஷல் டாலர் விண்டோவை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, சந்தையிலிருந்து மாதந்தோறும் $10 பில்லியன் முதல் $12 பில்லியன் வரையிலான நேரடி டாலர் தேவையை நீக்கியது.
வாடிக்கையாளர்கள் 100 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வங்கிகளிடம் ஹெட்ஜ் செய்து கொள்ளலாம். அதற்கு பின்புலம் உள்ள காண்டிராக்ட்களை கொடுக்க வேண்டாம் என்று இருந்தது. அது தற்போது 5 மில்லியன் டாலர்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இன்னும் சில கட்டுப்பாடுகளுடன். இதுவும் டாலருக்கு எதிராக ரூபாய் வலுப்பெற உதவியது.

பார்வர்ட் காண்டிராக்ட் ரீபுக்கிங்

ரூபாய்க்கு எதிரான சரிவைத் தடுப்பதற்காக, ரிசர்வ் வங்கி ரத்து செய்யப்பட்ட ஃபாரின் எக்சேஞ்ச் காண்டிராக்ட்களை ரீபுக்கிங் செய்வதைக் கட்டுப்படுத்தியள்ளது. அதேநேரத்தில், முதிர்வான கான்டிராக்ட்களை ரீபுக்கிங் செய்வதை இது தடுக்கவில்லை.
இதனால் வாடிக்கையாளர்கள் அடிக்கடி கான்டிராக்ட்களை கேன்சல் செய்து, ரீபுக் செய்து ஸ்பெகுலேட்டிங் லாபம் பார்ப்பது தடுக்கப்படும்.

அந்திய செலாவணி ரிஸ்க் ரிசர்வ்


இன்னொரு புதிய விஷயம், $2 மில்லியன் டாலருக்கு மேல் உள்ள, குறிப்பிட்ட டிரைவேட்டிவ் கான்டிராக்ட்களுக்கு 20% கட்டாய அந்நியச் செலாவணி ரிஸ்க் ரிசர்வை வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடை விதித்துள்ளது. அந்நியச் செலாவணி இடர் காப்பு (FERR) என்பது, நாணய ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தவும், இந்திய ரூபாயை நிலைப்படுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட ரொக்க வைப்புத் தேவையாகும்.
வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வட்டி இல்லாத ரொக்கக் கையிருப்பை வைக்க வேண்டும். ரொக்க கையிருப்பு (Cash Reserve) தினசரி ரிசர்வ் வங்கியிடம் வைப்பு செய்யப்பட்டு, டிரைவேட்டிவ் காண்டிராக்ட் முதிர்வு/முடிவுறும் வரை வைத்திருக்கப்பட வேண்டும்.

ரிசர்வ் வங்கி இதை ஏன் செயல்படுத்தியது?

ஒப்பந்தத்தின் ரூபாய் மதிப்பில் 20%-ஐ பணமாக முடக்குவது, வங்கிகளுக்கான ஃபண்டிங் மற்றும் ஆப்பர்சுனிட்டி செலவுகளை அதிகரிக்கிறது. இந்த செலவுகள் பொதுவாக வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படுகிறது. மதிப்பு குறையும் ரூபாய்க்கு எதிராக ஒருவழிப் பந்தயத்தில் ஈடுபடும் சந்தைப் பங்கேற்பாளர்கள், அதிகப்படியான, ஊக வணிக ரீதியான அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாலர்களை முன்கூட்டியே முன்பதிவு செய்வதை இது தடுக்கிறது.

இறக்குமதியாளர்கள் / ஏற்றுமதியாளர்களுக்கான தாக்கம்


உயரும் ஃபார்வர்டு ப்ரீமியங்கள்: ஃபார்வர்டு டாலர் கொள்முதல்களுக்காக வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் 20% வட்டியில்லா வைப்புத்தொகையை வைக்க வேண்டியிருப்பதால், வங்கிகளின் மூலதனம் முடங்கிக் கிடக்கிறது. இந்த வாய்ப்புச் செலவை ஈடுசெய்ய, வங்கிகள் இந்த செலவை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும். இதனால், ஃபார்வர்டு பிரீமியங்கள் 25–40 அடிப்படைப் புள்ளிகள் வரை உயர்ந்துள்ளன.
அமெரிக்க டாலரில் சம்பாதித்து, அதை விற்று இந்திய ரூபாயை வாங்கும் ஏற்றுமதியாளர்கள், கட்டமைப்பு ரீதியாக மாறுபட்ட நிலையில் உள்ளனர். ஏனெனில், பாரின் எக்சேஞ்சை ரூபாய்க்கு ஈடாக வாங்கும் ஒப்பந்தங்களையே இந்த FERR இலக்காகக் கொண்டுள்ளது.
எதிர்கால வரவுகளை ஹெட்ஜ் செய்யும் (அமெரிக்க டாலரை முன்னோக்கு விற்பனை செய்யும்) ஏற்றுமதியாளர்கள், இந்த சந்தை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் பயனடைகின்றனர். இதன் மூலம், முன்பு இருந்ததைவிட சிறந்த எக்சேஞ்ச் ரேட்டை பெற வாய்ப்பிருக்கிறது.


இது நிரந்தர தீர்வா?

2026-ல் ரூபாயின் வீழ்ச்சி 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், ரூபாயின் 1.81 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கதல்ல. மேலும், இந்த நடவடிக்கைகள் குறுகிய காலத்துக்கு அப்பால் ரூபாய்க்கு உதவுமா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது. இந்தியாவின் சந்தைகள் டாலர்களை ஈர்க்கும் திறன் பெற்றாலன்றி, மத்திய வங்கியின் நடவடிக்கைகள் அதிகபட்சம் தற்காலிகத் தீர்வாகவே இருக்கும்

கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜே.பி. மார்கன் வெளியிட்ட அறிக்கையின்படி இந்திய பங்குச் சந்தைக்குள் 115 பில்லியன் டாலர்கள் வர வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டிருக்கிறது. இது ஒரு நேர்மறையான அறிக்கையாகும். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், வெளிநாட்டு இன்ஸ்டிடியூசனல் இன்வெஸ்டர்கள், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதற்காக மூலதனத்தைக் கொண்டு வரும்போது, ​​அது இந்திய மூலதனச் சந்தைக்கு நேரடி அந்நியச் செலாவணி வரவை ஏற்படுத்தும். அதுவும் டாலருக்கு எதிரான ரூபாயை சிறிது வலுப்படுத்த உதவும்.

முந்தைய செய்தி
DP World CEO urges India to rethink port concessions
அடுத்த செய்தி
நகை நிறுவனங்களின் வருவாய் 22–28% வளர்ச்சி

தொடர்புடைய செய்திகள்