Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இமுத்ரா டிஜிட்டல் சான்றிதழ்களில் பாதுகாப்பு குறைபாடு - இந்தியாவில்?

இமுத்ரா டிஜிட்டல் சான்றிதழ்களில் பாதுகாப்பு குறைபாடு - இந்தியாவில்?

பயனர்களின் தகவல்களை இடைமறிக்கவும் வாய்ப்புள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இமுத்ரா நிறுவனத்தின் எட்டு டிஜிட்டல் சான்றிதழ்களுக்கான ரகசியப் பாதுகாப்பு குறியீடுகள் கசிந்துள்ளதாக செர்ட்-இன் அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் போலி இணையதளங்கள் மூலம் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இணையதளங்கள் நம்பகமானவை என்பதை உறுதிப்படுத்த இந்தச் சான்றிதழ்கள் பயன்படுகின்றன. கசிந்த குறியீடுகளைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் உண்மையான இணையதளங்களைப் போல போலித் தளங்களை உருவாக்கலாம். பயனர்களின் தகவல்களை இடைமறிக்கவும் வாய்ப்புள்ளது.
உலகளாவிய இணையப் பாதுகாப்புச் சேவையின் சிறிய பகுதியே பாதிக்கப்பட்டுள்ளதாக இமுத்ரா தெரிவித்துள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் டிஜிட்டல் கையொப்பம், இ-சைன் சேவைகளுக்குப் பாதிப்பில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.


பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. கூகுள், மொசில்லா நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களைத் தடுத்து நிறுத்தியுள்ளன. குறிப்பிட்ட இமுத்ரா மூலச் சான்றிதழுக்கான அங்கீகாரத்தை குரோம் வரும் 27ம் தேதி முதல் நீக்குகிறது.
நிறுவனத்தின் தகவல்கள் திருடப்படவில்லை என்றும், பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுவதாகவும் இமுத்ரா கூறியுள்ளது. பலவீனமான குறியீடுகள் உருவானதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில்தாக்கம் குறைவாக இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மற்ற சான்றிதழ் நிறுவனங்களிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளனவா என்பதை அரசு ஆராய்ந்து வருகிறது. இந்தச் சம்பவத்தால் நிறுவனத்தின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
வட்டி விகிதக் குறைப்புக்கு வாய்ப்பில்லை - ஆர்பிஐ ஆளுநர் திட்டவட்டம்
அடுத்த செய்தி
ஆறு வார உச்சத்தை எட்டியது ரூபாய்

தொடர்புடைய செய்திகள்