Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியது பஜாஜ் ஃபைனான்ஸ்

ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியது பஜாஜ் ஃபைனான்ஸ்

வட்டி விகிதங்களை 15 முதல் 40 அடிப்படைப் புள்ளிகள் வரை பஜாஜ் ஃபைனான்ஸ் உயர்த்தியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 15 முதல் 40 அடிப்படைப் புள்ளிகள் வரை பஜாஜ் ஃபைனான்ஸ் உயர்த்தியுள்ளது.


மகாராஷ்டிர மாநிலம், புனேவை தலைமையிடமாக கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் அறிவித்துள்ள புதிய வட்டி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான அனைத்து கால அவகாசங்களுக்கும் இந்த வட்டி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 31 முதல் 60 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான வட்டி 35 அடிப்படைப் புள்ளிகளும், மூத்த குடிமக்களுக்கான வட்டி 40 அடிப்படைப் புள்ளிகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

புதிய டெபாசிட் மேற்கொள்ளும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 31 முதல் 60 மாத காலத்துக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 7.75% வட்டி கிடைக்கும். இதற்கு முன்பு இந்த விகிதம் 7.40%-ஆக இருந்தது. 12 முதல் 17 மாத கால டெபாசிட்டுக்கான வட்டி 6.60%-ல் இருந்து 6.80 சதவீதமாகவும், 18 முதல் 30 மாத காலத்துக்கான வட்டி 6.85 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர, மூத்த குடிமக்களுக்கான கூடுதல் வட்டி சலுகையும் 0.35%-ல் இருந்து 0.40%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 31 முதல் 60 மாத கால புதிய டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சம் 8.15% வட்டி கிடைக்கும். முன்னதாக, இது 7.75%-ஆக இருந்தது.அதேபோல், 12 முதல் 17 மாத டெபாசிட்டுகளுக்கு 7.20%-ஆகவும், 18 முதல் 30 மாத டெபாசிட்டுகளுக்கு 7.40% ஆகவும் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


மேலும், முதிர்வடையும் டெபாசிட்டுகளை மீண்டும் புதுப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான வட்டி விகிதத்துடன் கூடுதலாக 0.10% வட்டி வழங்கப்படுகிறது. இதன்மூலம் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 7.85%-ஆகவும், மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சம் 8.25%-ஆகவும் வட்டி கிடைக்கும் என தெரிவித்துள்ளது.


முந்தைய செய்தி
ரூ.250 கோடியில் ஆலை அமைக்கும் கோத்ரேஜ் - எங்கு தெரியுமா?
அடுத்த செய்தி
இந்தியாவை மாற்றுவோம் - பிரதமர் மோடி உறுதி

தொடர்புடைய செய்திகள்