Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியாவை மாற்றுவோம் - பிரதமர் மோடி உறுதி

இந்தியாவை மாற்றுவோம் - பிரதமர் மோடி உறுதி

சர்வதேச உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பகிரவும் WhatsApp Facebook

சர்வதேச உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவோம். உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாகவும் உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

2001 அக்டோபர் 7-ல் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த அவர், பின்னர் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற `வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப சபா' நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:


வாக்கு அரசியல் காரணமாக சமூகம் பிளவுபட்டிருக்கிறது. இது நாடு எதிர்கொள்ளும் பெரிய சவால்களில் ஒன்று. விவசாயியின் வயலில் தண்ணீர் இல்லாததோ, மின்சாரம் இல்லாததோ குறிப்பிட்ட சாதிக்கான பிரச்சினை அல்ல. நம் அனைவருடைய பிரச்சினையும்தான். எனவே, இவற்றுக்கான தீர்வும் பொதுவாகத்தான் இருக்க வேண்டும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு 40 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை இருந்தது. தற்போது 140 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம். உலகின் முதல் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுப்போம். உலகளாவிய உற்பத்தி மையாக இந்தியாவை மாற்றுவோம். ஒலிம்பிக் போட்டியை நடத்துவோம். விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வோம்.


இஸ்ரேல் சென்ற விமானத்தை விபத்துக்குள்ளாக்க ஃபிளை துபாய் விமான துணை விமானி முயன்றபோது, தான் கத்தியால் குத்ததப்பட்ட நிலையிலும் சதியை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை உலகம் பாராட்டுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்களைப் பற்றியும் உலகம் பேசும். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கைகள் மற்றும் இடைவிடாத கடின உழைப்பின் மூலம் இந்த இலக்குகள் அடையப்படும். நாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால், 140 கோடி தீர்வுகள் நம்மிடம் உள்ளன.


என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் முன் தலைவணங்குகிறேன். என்னைப் பொறுத்தவரை மக்களே கடவுள். கடினமாக உழைக்கும் பாஜக தொண்டர்களே எனது பலம். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கும், ஜனநாயகத்தின் மீது மரியாதை கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

முந்தைய செய்தி
ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியது பஜாஜ் ஃபைனான்ஸ்
அடுத்த செய்தி
Anduril's $6.6 bn investment to expand US submarine industrial base

தொடர்புடைய செய்திகள்