Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நிர்மலா சீதாராமன்–ஜான் ஸ்வின்னி ஆலோசனை

நிர்மலா சீதாராமன்–ஜான் ஸ்வின்னி ஆலோசனை

இருதரப்பு தொடர்புகளை விரிவுபடுத்துவது முக்கிய விவாதப் பொருளாக அமைந்தது.

பகிரவும் WhatsApp Facebook

நிதிச் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர்கல்வி மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ஸ்காட்லாந்து முதல்வர் ஜான் ஸ்வின்னியும் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில், பல்வேறு துறைகளில் இணைந்தும், பரஸ்பர நலன் சார்ந்தும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது. நிதிச் சேவைகள் துறையில் இருதரப்பு தொடர்புகளை விரிவுபடுத்துவது முக்கிய விவாதப் பொருளாக அமைந்தது.


தூய்மையான எரிசக்தி மேம்பாடு மற்றும் எரிசக்தி மாற்றத்துக்கான ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுதல், கல்விசார் தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளும் ஆலோசிக்கப்பட்டன.


மேலும், இருதரப்பு சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் மக்களிடையேயான தொடர்புகளையும், பரிமாற்றங்களையும் வலுப்படுத்துவது குறித்த கருத்துகளும் விவாதிக்கப்பட்டன.
டெல்லிக்கு வருகை தந்துள்ள ஸ்வின்னியுடனான இந்த சந்திப்பு, முதலீடு, நிலையான வளர்ச்சி மற்றும் கல்விப் பரிமாற்றம் சார்ந்த துறைகளில் இந்தியா–ஸ்காட்லாந்து இடையேயான அடுத்தகட்ட உரையாடல்களுக்கு வாய்ப்பளிப்பதாக அமைந்தது.


நிதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான பேச்சுவார்த்தை, பல்வேறு துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
சேலம்-சென்னை விமான சேவையை மாற்றியமைக்க அமைச்சர் கோரிக்கை
அடுத்த செய்தி
இந்தியா - நியூசிலாந்து தரவுப் பகிர்வு ஒப்பந்தம்

தொடர்புடைய செய்திகள்