Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சேலம்-சென்னை விமான சேவையை மாற்றியமைக்க அமைச்சர் கோரிக்கை

சேலம்-சென்னை விமான சேவையை மாற்றியமைக்க அமைச்சர் கோரிக்கை

சென்னை புறப்பாடு நேரத்தை காலை 8 மணிக்கும், சேலம் வருகையை காலை 9 மணிக்கும், சேலம் புறப்பாடு காலை 9:25 மணிக்கும், சென்னை வருகை காலை 10:30 மணிக்கும் இருக்க வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

உடான் திட்டத்தில் சென்னை-சேலம் இடையே இயக்கப்படும் இண்டிகோ விமானங்களின் அட்டவணையை மாற்றியமைக்கக் கோரி தமிழக அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.


போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், இண்டிகோ நிறுவனத்தின் இணை இயக்குநர் ஸ்ரீனிவாசன் ஜெயசீலனுக்கு எழுதிய கடிதம்:

உடான் என எனப்படும் உதே தேஷ் கா ஆம் நாகரிக் (நாட்டின் சாதாரண குடிமகனும் பறக்கட்டும்). சென்னை-சேலம் வழித்தடத்தில் இருமுனைச் சேவைகளாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய நேர அட்டவணை, தொழில்முனைவோர் மற்றும் பயணிகளுக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஒரே நாளில் பயணத்தை முடிக்கும் வர்த்தகப் பயணிகளுக்கு இது ஏற்றதாக இல்லை.

இதனால், சென்னை புறப்பாடு நேரத்தை காலை 8 மணிக்கும், சேலம் வருகையை காலை 9 மணிக்கும், சேலம் புறப்பாடு காலை 9:25 மணிக்கும், சென்னை வருகை காலை 10:30 மணிக்கும் இருக்க வேண்டும். மேலும், சேலம்-பெங்களூரு இடையிலான விமான சேவையை தொடர்ந்து இயக்க வேண்டும். சேலத்தின் ஜவுளி மற்றும் உற்பத்தி துறையை பெங்களூரின் தொழில்நுட்ப சூழலுடன் இணைக்கும் இந்த சேவையை குறைப்பது அல்லது நிறுத்துவது பிராந்திய பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். சேலம் விமான நிலையத்தில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக செய்து தர தமிழக அரசு தயாராக உள்ளது.
முந்தைய செய்தி
கும்பகோணத்தில் ரூ.17 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அடுத்த செய்தி
நிர்மலா சீதாராமன்–ஜான் ஸ்வின்னி ஆலோசனை

தொடர்புடைய செய்திகள்