Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

`சமுத்திர மந்தன்' திட்டம் - ஆழ்கடல் எண்ணெய் ஆய்வுக்காக ரூ.84,084 கோடி

`சமுத்திர மந்தன்' திட்டம் - ஆழ்கடல் எண்ணெய் ஆய்வுக்காக ரூ.84,084 கோடி

‘சமுத்திர மந்தன்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவின் ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய், இயற்கை எரிவாயு இருப்புகளை கண்டறிவதை ஊக்குவிக்கும் வகையில், ரூ.84,084 கோடி மதிப்பிலான ‘சமுத்திர மந்தன்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் எரிசக்தித் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.84,084 கோடி மதிப்பிலான ‘சமுத்திர மந்தன்’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் 2030-31-ம் நிதியாண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:


ஆழ்கடல் மற்றும் அதி ஆழ்கடல் பகுதிகளில் 56 ஆய்வுக் கிணறுகள், நான்கு புவியியல் அடுக்குகளை ஆராயும் கிணறுகள் என மொத்தம் 60 கிணறுகள் அமைக்க நிதியுதவி வழங்கப்பட உள்ளது.400 மீட்டருக்கு மேற்பட்ட ஆழம் கொண்ட பகுதிகள் ஆழ்கடல் பகுதிகளாகவும், 1,500 மீட்டருக்கு மேற்பட்ட ஆழம் கொண்ட பகுதிகள் அதி ஆழ்கடல் பகுதிகளாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.


56 ஆய்வுக் கிணறுகளுக்கான உண்மையான செலவில் அதிகபட்சம் 50 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும். ஒரு கிணற்றுக்கு அதிகபட்சமாக ரூ.675 கோடி வழங்கப்படும். புவியியல் அடுக்குகளை ஆராய்வதற்கான நான்கு கிணறுகளுக்கு 100 சதவீதம் வரை செலவினத்தை ஏற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கிணற்றுக்கு அதிகபட்சமாக ரூ.1,350 கோடி வழங்கப்படும்.

 
அதிகபட்ச நிதியுதவி வரம்பின்படி, இந்த 60 கிணறுகளுக்கு மட்டும் ரூ.43,200 கோடி வரை செலவாகும். இது திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் பாதி அளவாகும். திட்ட ஆய்வுப் பணிகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து நிதியுதவி வழங்கப்படும்.


வணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததும் அல்லது ஆய்வு மற்றும் மேம்பாட்டுச் செலவில் 50 சதவீதத்தை நிறுவனம் மீட்டெடுத்ததும், இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அதன்படி, அரசின் நிதியுதவியைத் திரும்பப் பெறும் நடைமுறை தொடங்கும். திரும்பப் பெறப்படும் தொகைக்கு பணவீக்கத்தின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படாது.


முதல்கட்டமாக மகாநதி படுகைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், கட்ச் படுகைக்கும் குறியீட்டு அளவிலான நிதி ஒதுக்கீடு திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்களுக்கு பொதுமுதலீட்டு வாரியத்தின் பரிசீலனைக்குப் பிறகு ஒப்புதல் வழங்கப்படும்.


மத்திய அமைச்சரவைச் செயலர் தலைமையிலான வழிகாட்டுக் குழு திட்டத்தை மேற்பார்வையிடும். பெட்ரோலியத் துறைச் செயலர் தலைமையிலான செயற்குழு திட்டங்களின் மதிப்பீடு மற்றும் ஒப்புதல் பணிகளைக் கவனிக்கும். ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் (DGH), திட்டத்தின் செயலாக்க மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயல்பட்டு, டிஜிட்டல் கண்காணிப்பு முறையின் மூலம் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


திட்டம் குறித்து பெட்ரோலியத் துறைச் செயலர் நீரஜ் மிட்டல் கூறுகையில், "சமீபகாலங்களில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய எண்ணெய், எரிவாயு ஆய்வு முயற்சிகளில் இதுவும் ஒன்று .இதன் மூலம் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளில் 600 மில்லியன் டன்னுக்கும் அதிகமான எண்ணெய் சமமான அளவு (Oil Equivalent) கூடுதலாகக் கண்டறியப்பட வாய்ப்புள்ளது’ என்றார்.

முந்தைய செய்தி
பங்குச் சந்தை, டெபாசிட்டரிகளுக்கு புதிய நடைமுறை
அடுத்த செய்தி
அந்நிய செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டாலர் சரிவு

தொடர்புடைய செய்திகள்