Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பங்குச் சந்தை, டெபாசிட்டரிகளுக்கு புதிய நடைமுறை

பங்குச் சந்தை, டெபாசிட்டரிகளுக்கு புதிய நடைமுறை

தொழில் நடவடிக்கைகளை எளிதாக்குவதே புதிய முன்மொழிவின் நோக்கமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

பங்குச் சந்தை, பங்குகளை மின்னணு முறையில் பாதுகாத்து வைக்கும் டெபாசிட்டரிகள், தங்களது முக்கியப் பணிகளுடன் தொடர்புடைய நிதி பயன்பாடு உள்ளிட்டவற்றை, செபியின் முன் அனுமதியின்றி மேற்கொள்ள அனுமதிக்கும் புதிய நடைமுறையை பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளரான செபி முன்மொழிந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தைகளான என்எஸ்இ, பிஎஸ்இ, டெபாசிட்டரிகளான என்எஸ்டிஎல், சிடிஎஸ்எல் ஆகியவை சந்தை உட்கட்டமைப்பு நிறுவனங்கள் (MII) என அழைக்கப்படுகின்றன. இந்நிறுவனங்கள் நிதியைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு செபியின் முன் அனுமதி பெற வேண்டும். 


இதனால், சிறிய முதலீடுகளுக்குக்கூட கூடுதல் நடைமுறைகள் தேவைப்படுகின்றன. இதைக் குறைத்து, தொழில் நடவடிக்கைகளை எளிதாக்குவதே புதிய முன்மொழிவின் நோக்கமாகும்.


இதன்படி, செபியின் உத்தரவுகளின்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், ஒரே நிறுவனக் குழுமத்துக்குள் குறிப்பிட்ட பங்கு பரிமாற்றங்கள், துணை நிறுவனங்களின் சொந்த வருவாயைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகளுக்கு தானியங்கி அனுமதி வழங்கப்படும். பிற நிதி ஒழுங்குமுறை அமைப்புகளின் கீழ் உள்ள நிறுவனங்கள் மூலம் ஏற்கெனவே செபி ஒப்புதல் அளித்த நடவடிக்கைகளும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இதில் இடம்பெறும். அங்கீகரிக்கப்பட்ட கிளியரிங் கார்ப்பரேஷன்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.


தானியங்கி அனுமதியின் கீழ் ஒரு நிதியாண்டில் பயன்படுத்தப்படும் மொத்த நிதி, முந்தைய மார்ச் 31 நிலவரப்படி நிறுவனத்தின் நிகர மதிப்பில் 5 சதவீதம் அல்லது ஒழுங்குமுறை அமைப்பு நிர்ணயித்த குறைந்தபட்ச நிகர மதிப்பு வரம்பு ஆகியவற்றில் எது குறைவோ, அதற்குள் இருக்க வேண்டும். நிதியைப் பயன்படுத்திய பின்னரும், நிகர மதிப்பு குறைந்தபட்ச வரம்பின் 1.5 மடங்குக்குக் குறையக் கூடாது.


ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நிர்வாகக் குழுவின் முன் ஒப்புதல், நலன் முரண்பாடுகளைத் தடுக்கும் ஏற்பாடுகள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செபியிடம் அறிக்கை சமர்ப்பித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகள் குறித்து பொதுமக்கள் நவம்பர் 12-ஆம் தேதி வரை கருத்துகளைத் தெரிவிக்கலாம் என செபி தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
சென்னை புறப்பட இருந்த இண்டிகோ விமானத்துக்கு மிரட்டல்
அடுத்த செய்தி
`சமுத்திர மந்தன்' திட்டம் - ஆழ்கடல் எண்ணெய் ஆய்வுக்காக ரூ.84,084 கோடி

தொடர்புடைய செய்திகள்