Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வட இந்தியாவில் 4 ஹோட்டல்களை அறிமுகப்படுத்தும் ஹயாட்

வட இந்தியாவில் 4 ஹோட்டல்களை அறிமுகப்படுத்தும் ஹயாட்

4 ஹோட்டல்களை ஹயாட் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வட இந்தியாவில் தனது ஹோட்டல் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் விதமாக, உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் சராகா ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்துடன் 4 ஹோட்டல்களை ஹயாட் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, லக்னோவில் உள்ள சராகா ஹோட்டல், கார்பெட் பகுதியில், சராகா ரிசார்ட் அண்ட் ஸ்பா ஆகிய இரண்டு ஹோட்டல்களும் ஹயாட்டின் ‘அன்ஸ்கிரிப்டட் பை ஹயாட்’ (Unscripted by Hyatt) பிராண்டின் கீழ் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் இந்தப் பிராண்டு இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமாகிறது.


மேலும், ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா அருகே ‘டெஸ்டினேஷன் பை ஹயாட்’, ‘ஹயாட் பிளேஸ்’ ஆகிய பிராண்டுகளில் இரண்டு புதிய ஹோட்டல்கள் அமைக்கப்பட உள்ளன. லக்னோவின் பாரம்பரியம், இயற்கைச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் ஹோட்டல் சேவைகளை விரிவுபடுத்த உள்ளதாக கூறினார் ஹயாட் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவுக்கான தலைவர் விகாஸ் சாவ்லா.


ஹயாட்டின் சர்வதேச வணிகக் கட்டமைப்பு மூலம் தங்களது ஹோட்டல்களை அதிகமான பயணிகளிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று தெரிவித்தார் சராகா நிறுவனத்தின் நிறுவனர் முகமது அப்துல்லா.
லக்னோவில் உள்ள சராகா ஹோட்டலில் 41 அறைகளும், கார்பெட் புலிகள் காப்பகத்தின் அருகே 9 ஏக்கரில் அமைந்துள்ள சராகா ரிசார்ட்டில் 44 அறைகளும் உள்ளன. 

மேலும், ஜிம் கார்பெட் அருகே 20 ஏக்கரில் அமைய உள்ள புதிய ரிசார்ட்டில் 111 தங்கும் வசதிகள் இடம்பெற உள்ளன. அதேபோல், ஹயாட் பிளேஸ் ஹோட்டலில் 70 அறைகள், உணவகம், கூட்ட அரங்குகள், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.


சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஹயாட் நிறுவனம், 2026 ஜூன் நிலவரப்படி, 83 நாடுகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் வட இந்திய சுற்றுலாத் தலங்களில் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முந்தைய செய்தி
திருச்சி வந்த முதல்வருக்கு அதிகாரிகள் வரவேற்பு!
அடுத்த செய்தி
Over 1,000 absent TNPSC exam in Ranipet

தொடர்புடைய செய்திகள்