Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

10 ஆண்டு கடன் பத்திர வருவாய் 7 சதவீதமாக குறைய வாய்ப்பு - எஸ்பிஐ ரிசர்ச் தகவல்

10 ஆண்டு கடன் பத்திர வருவாய் 7 சதவீதமாக குறைய வாய்ப்பு - எஸ்பிஐ ரிசர்ச் தகவல்

அரசுப் பத்திரங்களுக்கான வருவாய் 6.75 முதல் 7 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை அரை சதவீதம் அளவுக்கு உயர்த்தினாலும், 2027 மார்ச் மாத இறுதிக்குள் இந்தியாவின் 10 ஆண்டுகால அரசுப் பத்திரங்களுக்கான வருவாய் 6.75 முதல் 7 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது இந்தியாவின் 10 ஆண்டுகளில் முதிர்வடையும் அரசு பத்திரங்களுக்கான வருவாய் சுமார் 7.43 சதவீதமாக உள்ளது. அதேசமயம், இந்தியா மற்றும் அமெரிக்காவின் 10 ஆண்டு கால அரசுப் பத்திர வருவாய்களுக்கு இடையிலான வித்தியாசம் சுமார் 2.50 சதவீதமாக உள்ளது.


கடந்த 2019-ம் ஆண்டு முதல் கிடைத்த தரவுகளை ஆய்வு செய்ததில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் 10 ஆண்டு கால அரசுப் பத்திர வருவாய்களுக்கு இடையிலான வித்தியாசம் 2 முதல் 3 சதவீதம் என்ற அளவில் இருப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது.


மேலும், ரெப்போ வட்டி விகிதத்தை தற்போதைய நிலையில் இருந்து 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி, 6 சதவீதமாக நிர்ணயித்தாலும், 10 ஆண்டு கால அரசுப் பத்திர வருவாய் 6.75 முதல் 7 சதவீதம் என்ற வரம்புக்குள் இருக்க வாய்ப்புள்ளது. அரசுப் பத்திர வருவாய்க்கும் ரெப்போ வட்டி விகிதத்துக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், மத்திய அரசின் கடன் திரட்டும் அளவு குறைவதும் பத்திரச் சந்தைக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், குறுகிய காலத்தில் 10 ஆண்டு கால அரசுப் பத்திர வருவாய் 7.60 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. சந்தையில் பல முதலீட்டாளர்கள், பத்திர வருவாய் 7.15 முதல் 7.20 சதவீதத்தைத் தாண்டியதை எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர்கள் மேற்கொண்ட முதலீட்டு நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் சமீபத்திய வருவாய் உயர்வுக்குக் காரணமாகியுள்ளன.


எனினும், தற்காலிக ஏற்ற இறக்கங்களைத் தாண்டி, 2027 மார்ச் மாத இறுதியில் பத்திர வருவாய் 6.75 முதல் 7 சதவீதத்துக்குள் நிலைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Don't travel by air, says SC
அடுத்த செய்தி
Three-phase nighttime power cut leaves farmers in lurch

தொடர்புடைய செய்திகள்