Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.2.12 லட்சம் கோடியில் தளவாடங்கள்: ட்ரோன், பீரங்கிகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்

ரூ.2.12 லட்சம் கோடியில் தளவாடங்கள்: ட்ரோன், பீரங்கிகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்

அதிக இயக்கத் திறன் கொண்ட வாகனங்கள், கடினமான நிலப்பரப்புகளில் வீரர்கள் மற்றும் தளவாடங்களின் போக்குவரத்துக்கு உதவும்.

பகிரவும் WhatsApp Facebook

முப்படைகளின் கண்காணிப்பு, தாக்குதல் மற்றும் வான் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், ரூ.2.12 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவம், கடற்படை, விமானப் படைக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைக் கொள்முதல் செய்யும் திட்டங்களுக்கு முதற்கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்திய ராணுவத்துக்கு அதிக இயக்கத் திறன் கொண்ட வாகனங்கள், தானாக இயங்கும் சங்கிலித் தொடர் பீரங்கி அமைப்பு, துப்பாக்கிச் சூட்டுக்குப் பதிலளிக்கும் அமைப்பு ஆகியவற்றை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதிக இயக்கத் திறன் கொண்ட வாகனங்கள், கடினமான நிலப்பரப்புகளில் வீரர்கள் மற்றும் தளவாடங்களின் போக்குவரத்துக்கு உதவும். தானியங்கி பீரங்கி அமைப்புகள், இயந்திரமயமாக்கப்பட்ட ராணுவப் பிரிவுகளின் இயக்கம் மற்றும் தாக்குதல் திறனை வலுப்படுத்தும். இலகுரக பல்நோக்கு ஹெலிகாப்டர்கள், மிகக் குறுகிய தொலைவு வான் பாதுகாப்பு அமைப்புகள், வாகனங்களில் பொருத்தப்படும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவற்றுக்கும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

எதிரிகளின் சிறிய வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் உதவும். ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், நவீன போர்க்களத்தில் பீரங்கி வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும். அத்துடன், நீண்ட தொலைவு ஆளில்லா விமான அமைப்புகள், கண்காணிப்பு ட்ரோன்கள், ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் தாக்குதல் அமைப்பு, நீண்ட தொலைவு சென்று இலக்கைத் தாக்கும் ‘காமிகேஸ்’ ட்ரோன் அமைப்பு ஆகியவற்றையும் ராணுவத்துக்காக வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

காமிகேஸ் ட்ரோன்கள், இலக்கை நோக்கிச் சென்று அதன் மீது மோதி வெடிக்கும் வகையில் செயல்படுபவை. புதிய ட்ரோன் அமைப்புகள், தொலைதூரப் பகுதிகளைக் கண்காணிக்கவும் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறியவும் உதவும். கடற்படைக்காக ‘ஆக்டிவ் ஆஃப்போர்டு டிகாய்’ எனப்படும் ஏவுகணை திசைதிருப்பும் அமைப்பு மற்றும் பிற முக்கிய கடற்படைத் தளவாடங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கப்பல்களை நோக்கி வரும் நவீன ஏவுகணைகளிடமிருந்து பாதுகாப்பை அதிகரிக்க இந்த அமைப்பு உதவும்.

விமானப்படைக்காக ஹெலிகாப்டர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆயுதங்கள் மற்றும் இடமாற்றம் செய்யக்கூடிய எக்ஸ்-பேண்ட் டாப்ளர் வானிலை ரேடார் அமைப்புகள் வாங்கப்பட உள்ளன. இவை விமானப் படையின் வான் பாதுகாப்பு மற்றும் போர்த் திறனை மேம்படுத்தும். ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த கொள்முதலில் சுமார் 82 சதவீதம் இந்திய நிறுவனங்களிடமிருந்து மேற்கொள்ளப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வழங்கப்பட்டுள்ளது கொள்முதல் திட்டங்களுக்கான முதற்கட்ட ஒப்புதல் மட்டுமே. திட்டங்களுக்கான விவரங்கள், ஒப்பந்தப் புள்ளிகள் உள்ளிட்ட அடுத்தடுத்த நடைமுறைகள் முடிந்த பிறகே இறுதி ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.







முந்தைய செய்தி
டாடா கேப்பிட்டல் நிகர லாபம் 51% உயர்ந்து ரூ.1,660 கோடி
அடுத்த செய்தி
வேதாந்தா இரும்பு, எஃகு நிறுவனத்தின் இழப்பு ரூ.311 கோடியாக குறைவு

தொடர்புடைய செய்திகள்