Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வேதாந்தா இரும்பு, எஃகு நிறுவனத்தின் இழப்பு ரூ.311 கோடியாக குறைவு

வேதாந்தா இரும்பு, எஃகு நிறுவனத்தின்  இழப்பு ரூ.311 கோடியாக குறைவு

முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இழப்பு ரூ.465 கோடியாக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

வேதாந்தா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (விஐஎஸ்எல்), செப்டம்பர் காலாண்டில் ரூ.311 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இழப்பு ரூ.465 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.3,015 கோடியிலிருந்து ரூ.2,846 கோடியாகக் குறைந்தது. மொத்த செலவு ரூ.3,458 கோடியிலிருந்து ரூ.3,129 கோடியாகக் குறைந்தது.
கோவா சுரங்கங்களில் விற்பனைக்குத் தகுதியான இரும்புத் தாது உற்பத்தி 22 சதவீதம் அதிகரித்து 0.10 மில்லியன் டன்னாக இருந்தது. 


விற்பனைக்குத் தகுதியான எஃகு உற்பத்தி 4 சதவீதம் உயர்ந்து 5.32 லட்சம் டன்னாகவும், உருகிய இரும்பு உற்பத்தி 3 சதவீதம் அதிகரித்து 5.52 லட்சம் டன்னாகவும் இருந்தது.
பருவகால இடையூறுகள், திட்டமிட்ட ஆலைப் பராமரிப்பு மற்றும் அதிக உற்பத்திச் செலவுகள் காலாண்டு செயல்பாட்டைப் பாதித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

செயல்திறனை மேம்படுத்துதல், செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிதி ஒழுங்கைப் பேணுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
ரூ.2.12 லட்சம் கோடியில் தளவாடங்கள்: ட்ரோன், பீரங்கிகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்
அடுத்த செய்தி
ராணிப்பேட்டையில் ரூ.40 கோடி கல்விக்கடன் இலக்கு

தொடர்புடைய செய்திகள்