Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உற்பத்தித் துறை வளர்ச்சி மந்தம் - தொழில்துறை செயல்பாடுகள் குறைவு!

உற்பத்தித் துறை வளர்ச்சி மந்தம் - தொழில்துறை செயல்பாடுகள் குறைவு!

உற்பத்தி வளர்ச்சியின் வேகம் செப்டம்பருடன் ஒப்பிடும்போது சற்றே குறைந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி சற்றே மந்தமடைந்துள்ளது. ஹெச்எஸ்பிசி இந்தியா பிஎம்ஐ குறியீடு, கடந்த செப்டம்பரில் 55.10 புள்ளிகளாக இருந்த நிலையில் அக்டோபரில் 54.70 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.

பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சியையும், அதற்குக் கீழ் இருந்தால் சரிவையும் குறிக்கும். அந்த வகையில், அக்டோபரில் குறியீடு குறைந்திருந்தாலும், உற்பத்தித் துறையின் வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கிறது.

எஸ் அண்ட் பி குளோபல் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த அக்டோபரில் புதிய ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து கிடைத்த ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அதிக ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இதனால் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனினும், உற்பத்தி வளர்ச்சியின் வேகம் செப்டம்பருடன் ஒப்பிடும்போது சற்றே குறைந்துள்ளது.


மூலப் பொருட்களுக்கான செலவு அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளது. உள்ளீட்டுச் செலவு பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. உற்பத்திப் பொருட்களின் விற்பனை விலை உயர்வும் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.இதற்கிடையே, மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க நிறுவனங்கள் அவற்றின் இருப்பை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக உயர்ந்துள்ளது.


ஆனால், அடுத்த ஓராண்டுக்கான உற்பத்தி வளர்ச்சி குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை செப்டம்பருடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. இருப்பினும், 18 சதவீத நிறுவனங்கள் அடுத்த ஓராண்டில் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றன. புதிய வாடிக்கையாளர்கள், தொழில்துறை தானியங்கி மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளுக்கான தேவை ஆகியவை வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் என நிறுவனங்கள் நம்புகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தும் 45.6% குடும்பத்தினர்: SBI study
அடுத்த செய்தி
ரூ.53,866 கோடியில் கடற்படைக்கு 8 போர் கப்பல்கள்

தொடர்புடைய செய்திகள்