Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிவு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிவு

அந்நியச் செலாவணிச் சந்தையில் 94.78-ஆக தொடங்கிய ரூபாய் மதிப்பு, வர்த்தகத்தின்போது 94.98 வரை சரிந்தது.

பகிரவும் WhatsApp Facebook

கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டுப் பங்குச் சந்தைகளின் மந்தநிலை காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 12 காசுகள் சரிந்து, 94.93 ஆக நிலைபெற்றது. தொடர்ந்து 2-வது நாளாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணிச் சந்தையில் 94.78-ஆக தொடங்கிய ரூபாய் மதிப்பு, வர்த்தகத்தின்போது 94.98 வரை சரிந்தது. வியாழக்கிழமை 43 காசுகள் வீழ்ச்சியடைந்து 94.81 ஆக முடிவடைந்திருந்தது.


சவுதி அரேபியா–ஹவுதி இடையிலான பதற்றம், எண்ணெய் சந்தையில் ஏற்ற இறக்கத்தைத் தொடரச் செய்யக்கூடும் என வர்த்தகர்கள் தெரிவித்தனர். பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.01 சதவீதம் உயர்ந்து, பீப்பாய்க்கு 114.31 அமெரிக்க டாலராக இருந்தது.


டாலர் குறியீடு 0.12 சதவீதம் அதிகரித்து 101.73 ஆக இருந்தது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் சரிந்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை நிகர அடிப்படையில் ரூ.3,458.70 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றனர்.

 
உயர்ந்த எண்ணெய் விலையும் அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனையும் ரூபாய்க்கு அழுத்தம் தந்தன. அமெரிக்கக் கடன் பத்திர வருவாய் குறைவும் ரிசர்வ் வங்கியின் தலையீடும் ஆதரவளிக்கலாம். ரூபாய் 94.65–95.25 வரம்பில் வர்த்தகமாகலாம் என ஆய்வாளர் அனுஜ் சௌத்ரி தெரிவித்தார். ஜியோ பொதுப்பங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, குறுகியகால டாலர் பணப் புழக்கம் மேம்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறினர்.

முந்தைய செய்தி
அந்நிய செலாவணி கையிருப்பு 5 பில்லியன் டாலர் சரிவு
அடுத்த செய்தி
5 ஆண்டுகளில் 3 கோடி டன் மீன் உற்பத்திக்கு இலக்கு

தொடர்புடைய செய்திகள்