Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

5 ஆண்டுகளில் 3 கோடி டன் மீன் உற்பத்திக்கு இலக்கு

5 ஆண்டுகளில் 3 கோடி டன் மீன் உற்பத்திக்கு இலக்கு

கடல் உணவு ஏற்றுமதி ரூ.70 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் மீன் உற்பத்தியை 3 கோடி டன்னாகவும், கடல் உணவு ஏற்றுமதியை ரூ.1.25 லட்சம் கோடியாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளத் துறைச் செயலர் அபிலக்ஷ் லிகி தெரிவித்தார்.

போபாலில் சிறிய அளவிலான உள்நாட்டு மீன்வளத்துக்கான தேசியச் செயல் திட்டத்தின் உருவாக்கப் பணிகளை நேற்று தொடங்கிவைத்து அவர் பேசியதாவது: இந்தியாவின் ஆண்டு மீன் உற்பத்தி தற்போது 1.97 கோடி டன்னாக உள்ளது. இதில் உள்நாட்டு மீன்வளத்தின் பங்கு சுமார் முக்கால் பகுதியாகும். கடல் உணவு ஏற்றுமதி ரூ.70 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது.


உற்பத்தி, ஏற்றுமதி வளர்ச்சியுடன் சிறிய அளவிலான மீனவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும். இத்திட்டம் அரசு அலுவலகங்களுடன் நின்றுவிடாமல், மீனவர்களின் வருமானத்தை மேம்படுத்தும் நடைமுறை மாற்றங்களுக்கு வழிவகுக்க வேண்டும்.


பருவநிலை மாற்றம், நீரின் தரம் குறைதல், நீர்நிலைகளில் ஆக்சிஜன் அளவு சரிதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள மீனவர்களின் அனுபவங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் வழிகாட்டுதலில், வங்காள விரிகுடா திட்ட அரசுகளிடையேயான அமைப்புடன் இணைந்து மத்திய மீன்வளத் துறை இத்திட்டத்தை உருவாக்குகிறது. ஆறுகள், கால்வாய்கள், அணை நீர்த்தேக்கங்கள், ஏரிகள், ஈரநிலங்கள், குளங்கள் மற்றும் குளிர்நீர்ப் பகுதிகளின் மீன்வளம் இதில் இடம்பெறும்.மீன்பிடி உரிமைகள், வள மேலாண்மை, வேலைவாய்ப்பு, பாலினச் சமத்துவம், அறுவடைக்குப் பிந்தைய வர்த்தகம், பேரிடர் அபாயங்கள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.


மீனவச் சமூகங்களிடம் இந்த திட்டத்தைக் கொண்டுசெல்ல சிறப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென அபிலக்ஷ் லிகி வலியுறுத்தியுள்ளார். பங்குதாரர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதி செய்யப்படும் இத்திட்டம் அடுத்த மாதம் பொதுவெளியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிவு
அடுத்த செய்தி
நோபலும் இல்லை; புலிட்சரும் கிடைக்கலை - ட்ரம்ப் வேதனை

தொடர்புடைய செய்திகள்