Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புதிய உச்சம் தொட்ட யுபிஐ - டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் சாதனை!

புதிய உச்சம் தொட்ட யுபிஐ  - டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் சாதனை!

நாளொன்றுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் யுபிஐ பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் பண்டிகைக்கால பயன்பாடு அதிகரிப்பால், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான அக்டோபர் மாதம் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. முதல்முறையாக நாளொன்றுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் யுபிஐ பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

ரூ.2,000-க்கும் அதிகமான வணிக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.40 சதவீதம் எம்டிஆர் கட்டணம், கடந்த அக்.15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. இதை அமல்படுத்துவதற்கு வணிகர் அமைப்புகள், பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தன.


 மேலும், பண்டிகைக் கால விற்பனையின்போது வெவ்வேறு கட்டண விகிதங்கள் மற்றும் நடைமுறைகள் குழப்பத்தை ஏற்படுத்தும் என வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, எம்டிஆர் கட்டண விதிமுறைகளைத் தீபாவளிக்குப் பிறகு அமல்படுத்தும் வகையில் என்பிசிஐ தள்ளிவைத்திருந்தது.


தேசியப் பணப் பரிவர்த்தனைக் கழகத்தின் (NPCI) வெளியிட்ட தரவுகளில் கூறியிருப்பதாவது: கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 2,547 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.31.53 லட்சம் கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி சராசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 82.20 கோடியாகவும், பரிவர்த்தனை மதிப்பு ரூ.1.01 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அக்டோபரில் யுபிஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தை எட்டியிருப்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயன்பாடு தொடர்ந்து விரிவடைந்து வருவதை வெளிப்படுத்தி உள்ளது.

அக்டோபரில் யுபிஐ புதிய சாதனை
2,547 கோடி
மொத்த பரிவர்த்தனைகள் எண்ணிக்கை
ரூ.31.53 லட்சம் கோடி
மொத்த பரிவர்த்தனை மதிப்பு
82.2 கோடி
தினசரி சராசரி பரிவர்த்தனைகள்
ரூ.1.01 லட்சம் கோடி
தினசரி சராசரி பரிவர்த்தனை மதிப்பு


கடந்த 3 மாதங்களில்
விவரம்                                     ஆகஸ்ட்       செப்டம்பர்               அக்டோபர்
மொத்த பரிவர்த்தனைகள் 2,451 கோடி 2,407 கோடி              2,547 கோடி
பரிவர்த்தனை மதிப்பு     ₹29.82 லட்சம் கோடி ₹29.37 லட்சம் கோடி ₹31.53 லட்சம் கோடி
மாதத்தின் நாள்கள்                  31                          30                            31


தினசரி சராசரி பரிவர்த்தனை ( For Bar chart )
விவரம்                                           செப்டம்பர்   அக்டோபர்
பரிவர்த்தனை எண்ணிக்கை 80.20 கோடி    82.20 கோடி
பரிவர்த்தனை மதிப்பு            ₹97,913 கோடி ₹1,01,000 கோடி

தினசரி பரிவர்த்தனை மதிப்பு முதல்முறை ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது.
தினசரி சராசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 82.20 கோடியை தாண்டியது.

ஆதாரம்: என்பிசிஐ

முந்தைய செய்தி
Over 1,000 absent TNPSC exam in Ranipet
அடுத்த செய்தி
Over 5,000 take TNPSC exams in Karur

தொடர்புடைய செய்திகள்