Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குவது சரியான அணுகுமுறை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குவது சரியான அணுகுமுறை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்தச் சூழலில், ரூபியோவின் இந்தியப் பயணம் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், இருதரப்பு உறவில் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் குறைப்பதற்கும் வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிக்கட்டத்துக்கு முன்னெடுத்து செல்லும் முயற்சியில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா வந்துள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மூன்று நாள் பயணமாக நேற்று மும்பை வந்தடைந்த ரூபியோவின் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் வரிகள், இந்தியா– பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை தணிப்பதில் தமக்கு பங்கு இருந்ததாக ட்ரம்ப் தெரிவித்த கருத்துகள், அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கைகள், எச்-1பி விசா கட்டண உயர்வு , கிரீன் கார்டு திட்டத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவையும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.

இந்தச் சூழலில், ரூபியோவின் இந்தியப் பயணம் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், இருதரப்பு உறவில் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் குறைப்பதற்கும் வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது:
இந்தியா கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் முன்னணி நாடாக விளங்குகிறது. வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்கக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். எனினும், எண்ணெய் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் தடையாக இருக்கலாம். 

அவற்றுக்குத் தீர்வு காண வேண்டியிருக்கும். கச்சா எண்ணெய் கொள்முதலுக்கான நாடுகளைப் பல்வகைப்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. ஒரே நாட்டைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குவது சரியான அணுகுமுறை ஆகும்.
மேலும், உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்குவது, உளவுத் தகவல்களைப் பகிர்வது தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. ரஷ்ய– உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா விரும்புகிறது. அதிகரித்து வரும் உயிரிழப்புகளும், போர் மற்ற பகுதிகளுக்கும் பரவும் அபாயமும் கவலை அளிக்கிறது,’’ என்றார்.

இதனை தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமீரக வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.


முந்தைய செய்தி
தாராபுரத்தில் நாதக வேட்பாளர் உள்பட 10 பேர் கைது
அடுத்த செய்தி
2031-க்குள் டிஜிட்டல் தங்கச் சந்தை 170 பில்லியன் டாலராக உயரும்: உலக தங்க கவுன்சில்

தொடர்புடைய செய்திகள்