Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இனி சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப்க்கு "NO"

இனி சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப்க்கு "NO"

ஜன. 1-ம் தேதி முதல் புதிய விதிகள் அமல்

பகிரவும் WhatsApp Facebook

சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்த முடியாத வகையில், மத்திய தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிகள் வரும் ஜன. 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

நாட்டில் 131 கோடிக்கும் அதிகமான சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. 80 கோடிக்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், செல்போன் வாயிலாக அதிக அளவில் இணையவழி மோசடிகளும், சைபர் குற்றங்களும் நடந்து வருகின்றன.


2023-ல் இணையவழி மோசடிகள் தொடர்பாக நாடு முழுவதும் 13 லட்சம் புகார்கள் பதிவாகின. இவற்றின் மூலம் ரூ.7,465 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 2024-ல் மோசடி தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 19.2 லட்சமாக அதிகரித்தது. 2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24 லட்சமாக உயர்ந்ததுடன், ரூ.22,495 கோடி மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகள் தங்களது செல்போனில் சிம் கார்டைப் பயன்படுத்தாமல், இணைய இணைப்பின் வாயிலாக வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் மக்களை ஏமாற்றுவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய தொலைத்தொடர்புத் துறை ‘சிம் பைண்டிங்’ எனப்படும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.


இதன்படி, வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னாப்சாட், ஷேர் சாட், ஜியோ சாட், அரட்டை, ஜோஸ் உள்ளிட்ட 8 செயலிகளும் சிம் கார்டுடன் இணைக்கப்பட்ட நிலையில் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரும் டிச. 31-ம் தேதிக்குள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்த புதிய நடைமுறையின் மூல, மோசடிகளில் பயன்படுத்தப்படும் கணக்குகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிவது எளிதாகும் என்றும், இணையவழிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
திண்டுக்கல், தேனி, மதுரை-க்கு `ரெட் அலர்ட்'
அடுத்த செய்தி
4 ஆண்டாக மூடிக்கிடக்கும் ஆலை - விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுமா?

தொடர்புடைய செய்திகள்