Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திண்டுக்கல், தேனி, மதுரை-க்கு `ரெட் அலர்ட்'

திண்டுக்கல், தேனி, மதுரை-க்கு `ரெட் அலர்ட்'

அதிகனமழை எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மழைப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று (அக். 25) திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய அதிகனமழை (204.4 மி.மீ-க்கு மேல்) பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரையிலான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் `மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் வானிலை மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து, உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
டாடா சன்ஸ் பங்குகள் பட்டியலிடப்படுவது கட்டாயம் - ரிசர்வ் வங்கி ஆளுநர் திட்டவட்டம்
அடுத்த செய்தி
இனி சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப்க்கு "NO"

தொடர்புடைய செய்திகள்