Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத வாகனங்களுக்குத் தடை - அதிரடி உத்தரவு

ஜிபிஎஸ் கருவி பொருத்தாத வாகனங்களுக்குத் தடை - அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் இம்மாதம் 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஜிபிஎஸ் கருவி இல்லாமல் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்குத் தடை விதிக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் இரா.வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் இம்மாதம் 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படாத லாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட், கருங்கல், மணல் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச் செல்ல இனி அனுமதி இல்லை என கனிம வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் கடுமையாக அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாலைகளில் அதிக எடையுடன் செல்லும் லாரிகள் போக்குவரத்து நெரிசலையும் விபத்துகளையும் ஏற்படுத்தின. இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்தும் நோக்கில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து லாரிகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்கத் தனி பிரிவு தொடங்கப்பட்ட நிலையில் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாக பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், ஜிபிஎஸ் கருவி பொருத்தாத வாகனங்கள் கனிமவள கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
ஆயுத பூஜைக்கு ஊருக்கு செல்லத் தயாரா? - சிறப்பு ரயில்கள் லிஸ்ட் இதோ!
அடுத்த செய்தி
இயற்பியல் துறையில் பெல்ஜியம் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு

தொடர்புடைய செய்திகள்