Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

4 ஆண்டாக மூடிக்கிடக்கும் ஆலை - விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுமா?

4 ஆண்டாக மூடிக்கிடக்கும் ஆலை - விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுமா?

ஆலை மீண்டும் முழுமையான உற்பத்திக்குக் கொண்டுவரப்பட்டால், விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வாய்ப்பு உருவாகும்.

பகிரவும் WhatsApp Facebook

மடத்துக்குளத்தில் நான்கு ஆண்டாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடிக்கிடக்கிறது. இதை நவீனப்படுத்தி மீண்டும் இயக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா கிருஷ்ணாபுரத்தில் 1960-ல் தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக அமராவதி ஆலை தொடங்கப்பட்டது. இந்த ஆலை நாளொன்றுக்கு 1,250 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டது. ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளுக்கும், ஆலைத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது.

இந்த ஆலையின் கழிவுகளில் இருந்து எரிசாராயம் தயாரிக்கும் பிரிவு 1995-ல் தொடங்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து, சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வந்த இந்த அரசு கூட்டுறவு நிறுவனம், கடந்த 4 ஆண்டாக மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆலைத் தொழிலாளர்கள் கூறியதாவது: "கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக இயங்கி வந்த ஆலையின் இயந்திரங்கள், காலத்துக்கு ஏற்ப முழுமையாக நவீனப்படுத்தப்படவில்லை. இதனால் அடிக்கடி இயந்திரப் பழுதுகள் ஏற்பட்டு, அரவைப் பணி பாதிக்கப்பட்டது.

கரும்பை எடை மேடையில் இருந்து அரவைப் பகுதிக்கு கொண்டு செல்ல நவீன கன்வேயர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இயந்திரங்கள் பழுதடையும்போது அவற்றை உடனடியாக சரிசெய்ய தேவையான உதிரிபாகங்கள், தொழில்நுட்ப வசதிகளும் போதிய அளவில் இல்லை. இதனால், அரவைப் பணியில் தாமதம், உற்பத்திப் பாதிப்பு, நிதிச்சுமை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இதையடுத்து, ஆலையை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது" இவ்வாறு அவர்கள் பேசினர்.

அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கூறியதாவது: "அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்கி, பழைய இயந்திரங்களை மாற்றி புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஆலை மீண்டும் முழுமையான உற்பத்திக்குக் கொண்டுவரப்பட்டால், விவசாயிகளிடம் இருந்து கரும்பைக் கொள்முதல் செய்ய வாய்ப்பு உருவாகும். இதனால் கரும்பு விவசாயிகள் தங்கள் விளைபொருளை விற்பனை செய்ய நிலையான வாய்ப்பைப் பெறுவதுடன், ஆலைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்படும்.

சர்க்கரை உற்பத்தியுடன் இணைந்து எரிசாராய உற்பத்தியையும் மீண்டும் தொடங்க வாய்ப்பு ஏற்படும். இதனால், ஆலையைச் சார்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் எனப் பல தரப்பினரின் வாழ்வாதாரம் மீண்டும் மேம்பட முடியும்" என்றனர்.

இந்த பகுதியை சேர்ந்த பலரும் இந்த ஆலையை நவீனப்படுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி
இனி சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப்க்கு "NO"
அடுத்த செய்தி
OpenAI resumes frontier AI model training after 11-day pause

தொடர்புடைய செய்திகள்