Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஈரோடு ஜவுளிச் சந்தையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு
ஈரோட்டில் ஜவுளி மார்க்கெட்டில் தீபாவளி ஜவுளி துணிகள் எடுக்க குவிந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது துணிகளின் விலை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர ஜவுளிச் சந்தையில் விற்பனை சூடுபிடித்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள், பல்வேறு வகையான துணிகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது துணிகளின் விலை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நூல் விலை 40 சதவீதம் வரை உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்து, பாலியஸ்டர் நூல் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் பாலியஸ்டர் மற்றும் பருத்தித் துணிகளின் விலையும் உயர்ந்துள்ளதால், அனைத்து வகையான துணிகளிலும் விலை உயர்வு காணப்படுவதாக அவர் தெரிவித்தார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு மொத்த வியாபாரம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை இல்லாத வானிலை வியாபாரத்துக்குச் சாதகமாக இருப்பதாகவும், மொத்த விற்பனை மட்டுமின்றி, ஆர்.கே.வி. சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் சில்லறை விற்பனையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாராந்திர ஜவுளிச் சந்தையையொட்டி, பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி. சாலை, காந்திஜி சாலை, அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை இல்லாதது வியாபாரத்துக்கு மிகவும் சாதகமாக உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

முந்தைய செய்தி
காகித ஆலைகளுக்கு நிலக்கரி ஒதுக்கீட்டில் முன்னுரிமை தேவை
அடுத்த செய்தி
சென்னையில் வியோமா ஏஐ சார்பில் 52 மெகாவாட் தரவு மையம்

தொடர்புடைய செய்திகள்