Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னையில் வியோமா ஏஐ சார்பில் 52 மெகாவாட் தரவு மையம்

சென்னையில் வியோமா ஏஐ சார்பில் 52 மெகாவாட் தரவு மையம்
வியோமா ஏஐ தரவு மையத்தின் மாதிரி.

சென்னையில் 52 மெகாவாட் திறனில் ஏஐ தரவு மையம் அமைக்கும் வியோமா ஏஐ!

பகிரவும் WhatsApp Facebook

சென்னையில் 52 மெகாவாட் திறன் கொண்ட ஏஐ பயன்பாட்டுக்கான பசுமை தரவு மையம் அமைக்கும் பணிக்கு, வியோமா ஏஐ அடிக்கல் நாட்டி உள்ளது.


இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள், கிளவுட் தொழில்நுட்பப் பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த கணினிச் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கேற்ப, தரவுகளை உள்நாட்டிலேயே சேமித்து நிர்வகிப்பதற்கான தேவையும் உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், மும்பையை தலைமையிடமாக கொண்ட எல் அண்ட் டி குழுமத்தின் ஒருங்கிணைந்த ஏஐ கிளவுட் மற்றும் ஹைப்பர்ஸ்கேல் தரவு மைய பிரிவான வியோமா.ஏஐ (Vyoma.AI), அதிக கணினித் திறன் தேவைப்படும் ஏஐ பயன்பாடுகளைக் கையாளும் வகையில் இந்த தரவு மையத்தை அமைக்கிறது.

இதில், நேரடியாக சிப்பைக் குளிர்விக்கும் (Direct-to-Chip Liquid Cooling) மேம்பட்ட திரவக் குளிரூட்டும் தொழில்நுட்பம் இடம்பெறும். இதன் மூலம் அதிக வெப்பத்தைத் திறம்படக் கட்டுப்படுத்துவதுடன், கணினிச் செயல்பாடுகளின் நம்பகத்தன்மையையும் செயல்திறனையும் மேம்படுத்த முடியும். மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாடு மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டமைப்பை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹைப்பர்ஸ்கேல் நிறுவனங்கள், புதிய தலைமுறை கிளவுட் சேவை நிறுவனங்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த மையம் அமையும். நாடு முழுவதும் 250 மெகாவாட்டுக்கும் அதிகமான தரவு மைய திறனை உருவாக்க வியோமா.ஏஐ இலக்கு நிர்ணயித்துள்ளது.

சென்னையில் எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கி வரும் பிரம்மாண்ட ஏஐ ஃபேக்டரி வளாகத்தின் ஒரு பகுதியாக இந்த தரவு மையம் அமைகிறது. இந்த வளாகத்தில் ஏற்கெனவே 30 மெகாவாட் திறன் கொண்ட தரவு மையம் செயல்பாட்டில் உள்ளது. மேலும், 150 எம்.வி.ஏ. மின்சாரக் கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வியோமா.ஏஐ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாந்த் சிரஞ்சீவி ஜெயின் கூறுகையில், இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் 52 மெகாவாட் தரவு மையம் திட்டம் முக்கிய மைல்கல்லாக அமையும். ஏஐ பயன்பாடுகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை கணினிச் செயல்பாடுகளுக்குத் தேவையான செயல்திறன், விரிவாக்க வசதி மற்றும் நம்பகத்தன்மையை வழங்கும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்படுகிறது. அதே நேரத்தில், குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது’ என்றார்.

முந்தைய செய்தி
ஈரோடு ஜவுளிச் சந்தையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு
அடுத்த செய்தி
தீபாவளி விற்பனைக்குத் தயாராகும் திருப்பூர் காதர்பேட்டை ஜவுளிச் சந்தை!

தொடர்புடைய செய்திகள்