Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பின்னலாடை வாரியத்தில் எம்எஸ்எம்இ-க்களுக்கு முக்கியத்துவம்

பின்னலாடை வாரியத்தில் எம்எஸ்எம்இ-க்களுக்கு முக்கியத்துவம்

தொழில் துறையினரின் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பகிரவும் WhatsApp Facebook

பின்னலாடைத் தொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம் தலைமை வகித்தார்.

இதில், ஏராளமான சிறு, குறு தொழில்முனைவோர் பங்கேற்றனர். தொழில் துறையினரின் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. பின்னர் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நூல், பாலியஸ்டர் நூல் உள்ளிட்ட பல்வேறு மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சாயமிடும் கட்டண அதிகரிப்பால் பின்னலாடை உற்பத்திச் செலவு 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையிலும், உள்நாட்டுச் சந்தையிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய ஆர்டர்களைப் பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது.

திருப்பூரில் சுமார் 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பின்னலாடைத் தொழிலில், 90 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக (MSME) உள்ளன. இவற்றில் ஏற்கெனவே 50 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள நிறுவனங்களும் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடியால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசை எளிதில் அணுகி தங்களது கோரிக்கைகளை முன்வைக்க முடிகிறது. ஆனால், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களால் அரசை நேரடியாக அணுகுவதில் சிக்கல் உள்ளது. மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தீபாவளிக்குப் பிறகு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படும்.

திருப்பூரில் அமைக்கப்பட உள்ள பின்னலாடை வாரியம், பெரிய நிறுவனங்களை மட்டுமே மையப்படுத்தாமல், பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
Europe looks past rioters to their parents, apps in their pockets
அடுத்த செய்தி
Loan camp for aspiring entrepreneurs in Dindigul

தொடர்புடைய செய்திகள்