Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

75% சம்பள உயர்வு வழங்க விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை

75% சம்பள உயர்வு  வழங்க விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை

20 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதால், புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அமல்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் பணியாற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விசைத்தறித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிபாளையத்தில் ஏற்கெனவே போடப்பட்ட 10 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். 

குமாரபாளையத்தில் 20 சதவீத கூலி உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதால், புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தொழிலாளர்கள், திருச்செங்கோட்டில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை மூலம் கூலி உயர்வு வழங்கும் நடைமுறை இருந்தும், கடந்த 15 மாதங்களாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 75 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், 8 மணி நேர வேலை, இரவு நேரப் பணிக்கு உரிய விடுமுறை, இஎஸ்ஐ, பிஎஃப் அடையாள அட்டைகள், கூடுதல் நேரப் பணிக்கு இரட்டிப்பு சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் விசைத் தறித் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முந்தைய செய்தி
IDBI Bank sale: Govt says reserve price unchanged,
அடுத்த செய்தி
India on track to achieve $1 trillion exports this year: CEA Nageswaran

தொடர்புடைய செய்திகள்