Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தவெக மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க போட்டா போட்டி: பனையூர் அலுவலகத்தில் பரபரப்பு

தவெக மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க போட்டா போட்டி: பனையூர் அலுவலகத்தில் பரபரப்பு

மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்துள்ளவர்களும், கட்சி நிர்வாகப் பதவிகளை குறிவைத்து காய் நகர்த்துவதால், தவெகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளது

பகிரவும் WhatsApp Facebook

உள்ளாட்சித் தேர்தலுக்கு மாவட்டச் செயலாளர் தொடங்கி, வட்டச் செயலாளர் வரையிலான நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளை நியமிப்பதன் மூலம் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த தவெக திட்டமிட்டுள்ளது. பதவிகளைப் பிடிக்க நிர்வாகிகளிடம் போட்டா போட்டி நிலவுவதால், பனையூரில் உள்ள கட்சி அலுவலகம் களைகட்டி வருகிறது.

விஜய் ரசிகர் மன்றத்தில் தொடங்கி, நற்பணி இயக்கம் வரை தொடர்ந்து பயணித்தவர்களில் சிலருக்கு சட்டபேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. பொருளாதார வசதி இல்லாத பலர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில், தைரியமாக களமிறங்கிய பலர் எம்எல்ஏக்களாவும், சிலர் அமைச்சர்களாகவும் பதவி பெற்றுள்ளனர்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்துள்ளவர்களும், கட்சி நிர்வாகப் பதவிகளை குறிவைத்து காய் நகர்த்துவதால், தவெகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்தை சந்தித்து கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இதனால் பனையூரில் உள்ள தவெக அலுலகம் களைகட்டியுள்ளது.

இதுகுறித்து தவெக நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது: மொத்தமுள்ள 234 தொகுதிகளை 155 மாவட்டங்களாக பிரித்து, மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர மகளிரணி, தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகம், மருத்துவம், சட்ட ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் உள்ளனர். தற்போது தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற ரீதியில் நிர்வாகிகளை நியமிக்க தலைமை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தவெக சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் பதவியைத் தொடர விரும்புகின்றனர். மாவட்டச் செயலாளர் பதவியில் இல்லாத எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தங்கள் தொகுதிக்கு மாவட்டச் செயலாளராக தங்களை நியமிக்க வேண்டுமென பொதுச்செயலாளரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்கின்றனர். ஏற்கெனவே மாவட்டச் செயலாளர் பதவி வகிப்பவர்கள் மற்றும் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தங்களுக்கு கட்சிப் பதவி வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அதிமுகவில் இருந்து வந்த எம்எல்ஏக்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படுவதால், பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது. அதிமுகவில் இருந்து எங்கள் கட்சியில் இணைபவர்கள் அதிகாரபலம், பண பலத்தை பயன்படுத்துகின்றனர். தொடக்க காலம் முதல் பணியாற்றும் நிர்வாகிகள், அவர்களை கண்டு அச்சப்பட்டு ஒதுங்கி நிற்கும் நிலை உள்ளது.

தவெக அமைச்சரவையில் முன்னணியில் உள்ள செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோர் அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் போன்றவர்கள் கட்சி நிர்வாகிகளை கண்டு கொள்வதில்லை. ரசிகர் மன்றத்தில் தொடக்கத்தில் இருந்து பணியாற்றிய தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும், தங்களை வழிநடத்தி வந்த மாநிலப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்திடம் முறையிட்டு வருகின்றனர். அவரும் ஆறுதலாக கருத்துகளை கூறி சமாதானப்படுத்தி வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தவெக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஆனந்த் முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கருத்தறிய அமைச்சரை ஆனந்தை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.

முந்தைய செய்தி
IT firms poised to benefit from enterprise AI adoption
அடுத்த செய்தி
டிவிஎஸ் மோட்டார் Q2 வருவாய் 44% உயர்வு

தொடர்புடைய செய்திகள்