Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டிவிஎஸ் மோட்டார் Q2 வருவாய் 44% உயர்வு

டிவிஎஸ் மோட்டார்  Q2 வருவாய் 44% உயர்வு

செயல்பாட்டு லாப வரம்பு 12.70 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வருவாய் 44 சதவீதம் அதிகரித்து ரூ.17,103 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.11,905 கோடியாக இருந்தது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், நடப்பு நிதியாண்டுக்கான முதல் அரையாண்டு, 2-ம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டோடு ஒப்பிடுகையில், நிறுவனத்தின் நிகர லாபம், 52 சதவீதம் உயர்ந்து ரூ.1,377 கோடியாகவும், செயல்பாட்டு லாபம் 47 சதவீதம் அதிகரித்து ரூ.2,219 கோடியாகவும் உள்ளது. செயல்பாட்டு லாப வரம்பு 12.70 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்ந்துள்ளது.


செப்டம்பர் காலாண்டில், இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 27 சதவீதம் அதிகரித்து 19 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் விற்பனை 28 சதவீதம் உயர்ந்து 9 லட்சமாகவும், ஸ்கூட்டர் விற்பனை 29 சதவீதம் அதிகரித்து 8 லட்சமாகவும் உள்ளது.
மின்சார இருசக்கர வாகன விற்பனை 133 சதவீதம் அதிகரித்து 1,86,186 ஆக உயர்ந்துள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 47 சதவீதம் வளர்ந்து 78,475 ஆகவும், சர்வதேசச் சந்தை விற்பனை 35 சதவீதம் அதிகரித்து 5 லட்சமாகவும் உள்ளது.


ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டு காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 41 சதவீதம் அதிகரித்து ரூ.30,999 கோடியாகவும், வரிக்கு முந்தைய லாபம் 52 சதவீதம் உயர்ந்து ரூ.3,454 கோடியாகவும் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் இருசக்கர வாகன விற்பனை 27 சதவீதம் அதிகரித்து 34 லட்சமாகவும், மூன்று சக்கர வாகன விற்பனை 47 சதவீதம் உயர்ந்து 1,45,172 ஆகவும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

நிதி சேவைக்கு தனி நிறுவனம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது நுகர்வோர் நிதிச் சேவை மற்றும் தொடர்புடைய தொழில்களைத் தனி நிறுவனமாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த மறுசீரமைப்புத் திட்டத்துக்கு அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு, புதிதாக உருவாக்கப்படும் நிறுவனத்திலும், அவர்கள் ஏற்கெனவே வைத்துள்ள பங்குகளின் எண்ணிக்கைக்கு இணையான பங்குகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.


இதனிடையே, துணை நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் சர்வீசஸ் நிறுவனத்தை, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு வரும் எஸ்டிபிஎல் டிரேடிங் அண்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் கட்டுப்பாட்டுப் பங்குகளைப் பெறவும் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இணைப்பு நிறைவடைந்ததும், டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸில் நிறுவனத்துக்குக் கூடுதலாக சுமார் 2.4 சதவீதப் பங்குகள் கிடைக்கும்.

முந்தைய செய்தி
தவெக மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க போட்டா போட்டி: பனையூர் அலுவலகத்தில் பரபரப்பு
அடுத்த செய்தி
ட்ரோன் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயி*ழப்பு

தொடர்புடைய செய்திகள்