Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பூடானின் கெலெஃபு ‘மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டி’ பகுதியில் 108 ஸ்தூபிகள்!

பூடானின் கெலெஃபு ‘மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டி’ பகுதியில் 108 ஸ்தூபிகள்!
பூடானின் கெலெஃபு மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள புத்த மத ஸ்தூபி.

சுமார் 40 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு, நாட்டின் புதிய நகரக் கனவுக்கு வலுசேர்த்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஆன்மிகத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் இணைக்கும் முயற்சியாக, பூடானின் கெலெஃபு ‘மைண்ட்ஃபுல்னெஸ் சிட்டி’ பகுதியில் 108 புத்த ஸ்தூபிகள் ஒரே நாளில் எழுப்பப்பட்டன. சுமார் 40 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு, நாட்டின் புதிய நகரக் கனவுக்கு வலுசேர்த்துள்ளது.

அதிகாலை மூன்று மணிக்கு பாரம்பரிய புத்த வழிபாடுகளுடன் பணிகள் தொடங்கின. நீண்ட ஊதுகொம்புகளின் முழக்கம் ஒலிக்க, நாடு முழுவதிலுமிருந்து வந்த மக்கள் 108 இடங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றினர். மதம் மற்றும் சமூகப் பணிகளுக்காக மக்கள் தன்னார்வத்துடன் ஒன்றுகூடும் பூடானின் மரபை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.

ஒவ்வொன்றும் 15 மீட்டர் உயரமுள்ள இந்த ஸ்தூபிகள், மாவ் சூ ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. அடுத்தடுத்த ஸ்தூபிகளுக்கு இடையே 108 மீட்டர் இடைவெளி விடப்பட்டுள்ளது. மொத்தத்தில் சுமார் 12 கிலோமீட்டர் நீளத்துக்கு விரியும் ஆன்மிகப் பாதையாக இவை உருவெடுத்துள்ளன.

மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கின் எண்ணத்தில் உதித்த இம்முயற்சியின் முக்கிய நிகழ்வில் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர். பூடானின் உயரிய ஆன்மிகத் தலைவர் ஜே கென்போ மதச்சடங்குகளை வழிநடத்தினார். புத்தரின் விண்ணுலகிலிருந்து பூமிக்குத் திரும்பிய நிகழ்வை நினைவுகூரும் புனித நாளுடனும், மன்னரின் முடிசூட்டு ஆண்டு விழாவுடனும் இந்த நிகழ்வு இணைந்தது.

சுற்றுலா, கல்வி, பசுமைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதே புதிய நகரத்தின் நோக்கம். இளைஞர்களுக்குத் தாய்நாட்டிலேயே வாய்ப்புகளை உருவாக்கவும் பூடான் விரும்புகிறது.

புத்த மரபின் அடையாளங்களாக எழுந்துள்ள இந்த ஸ்தூபிகள், கெலெஃபுவின் தனித்துவமான முகவரியாகவும் மாறுகின்றன. ஆன்மிக அமைதியை நாடும் பயணிகளை ஈர்க்கும் நகரக் கனவில், மக்கள் பங்களிப்புடன் உருவான இந்தப் பாதை குறிப்பிடத்தக்க தொடக்கமாக அமைந்துள்ளது.






முந்தைய செய்தி
IL&FS moves NCLT to recover ₹186 crore from 23 ex-directors
அடுத்த செய்தி
எது அசல் 'Hippie' Porsche?..உரிமை கொண்டாடும் இரு தரப்பு

தொடர்புடைய செய்திகள்