Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மணிக்கு 790 கிலோ மீட்டர்- உலக சாதனை படைத்த ட்ரோன்

மணிக்கு 790 கிலோ மீட்டர்- உலக சாதனை படைத்த ட்ரோன்

எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்ட நிலையில், இந்த ட்ரோனால் தனது அதிகபட்ச வேகத்தில் தொடர்ந்து 4 நிமிடங்கள் வரை பறக்க முடியும்.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் உருவாக்கிய சிறிய ரக ட்ரோன், மணிக்கு 790 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் சால்வோ என்ற கல்லூரி மாணவர், தனது கல்லூரி திட்டப் பணிக்காக (காலேஜ் ப்ராஜெக்ட்) 'ரீப்பர்' என்ற பெயரில் சிறிய ரக ரிமோட் கண்ட்ரோல் ட்ரோன் ஒன்றை வடிவமைத்தார். அண்மையில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில், இந்த ட்ரோன் சுமார் 1.2 கிலோ எடையைச் சுமந்தபடி, மணிக்கு 790 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து புதிய உலக சாதனையைப் பதிவு செய்தது.

எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்ட நிலையில், இந்த ட்ரோனால் தனது அதிகபட்ச வேகத்தில் தொடர்ந்து 4 நிமிடங்கள் வரை பறக்க முடியும். மேலும், நகரும் ரயில்கள் மற்றும் டிரக்குகளில் இருந்துகூட இதை எளிதாக விண்ணில் செலுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

வெறும் 20 விநாடிகளில் 6,600 அடி உயரத்தை எட்டும் திறன் கொண்ட இந்த ட்ரோன், பாதுகாப்பு மற்றும் சர்வதேச விண்வெளித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவரின் இந்த அசத்தல் கண்டுபிடிப்புக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

முந்தைய செய்தி
பல்லுயிர் பாதுகாப்பு இலக்குகளை அடைய 200 நாடுகள் உறுதி
அடுத்த செய்தி
புதிய டிரக் டயரை அறிமுகம் மிச்செலின் நிறுவனம்

தொடர்புடைய செய்திகள்