Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வேதாந்தா பங்குக்கு ரூ.5 டிவிடெண்ட் - எந்த தேதியில் பதிவு செய்யலாம்?

வேதாந்தா பங்குக்கு ரூ.5 டிவிடெண்ட் - எந்த தேதியில் பதிவு செய்யலாம்?

முதல் இடைக்கால ஈவுத்தொகையாக (டிவிடெண்ட்) பங்கு ஒன்றுக்கு ரூ.5 அறிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வேதாந்தா நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டுக்கான முதல் இடைக்கால ஈவுத்தொகையாக (டிவிடெண்ட்) பங்கு ஒன்றுக்கு ரூ.5 அறிவித்துள்ளது. இதற்காக மொத்தம் சுமார் ரூ.1,955 கோடி வழங்கப்படவுள்ளது.

நிறுவனப் பிரிப்புக்குப் பிறகு அறிவிக்கப்படும் முதல் இடைக்கால ஈவுத்தொகை இதுவாகும். நேற்று நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வேதாந்தா பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது. ஈவுத்தொகைக்கான பதிவுத் தேதி அக்டோபர் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் தொகை வழங்கப்படும்.


நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் துத்தநாகம், இரும்புக் கலவைகள், துறைமுகங்கள், அலுமினியம் உள்ளிட்ட பிரிவுகளில் நிறுவனம் வலுவான செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. உற்பத்தித் திறன் விரிவாக்கம், செயல்பாட்டுத் திறன் மேம்பாடு மற்றும் முதலீடுகள் இந்த வளர்ச்சிக்கு உதவியதாக நிறுவனம் கூறியுள்ளது.


கடந்த 2025-26 நிதியாண்டில் மூன்று இடைக்கால ஈவுத்தொகைகள் மூலம் பங்கு ஒன்றுக்கு ரூ.34 வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.43.50 வழங்கப்பட்டிருந்தது.
ஜூன் 2026 காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 71.8 சதவீதம் உயர்ந்து ரூ.5,473 கோடியாகவும், வருவாய் 53.6 சதவீதம் அதிகரித்து ரூ.24,205 கோடியாகவும் இருந்தது.


உலகளாவிய உலோக விலை உயர்வு, விற்பனை அதிகரிப்பு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை லாப உயர்வுக்குக் காரணங்களாகக் கூறப்பட்டன. இக்காலாண்டில் செலவுகள் ரூ.17,558 கோடியாக அதிகரித்தன. நிறுவனத்திலிருந்து பிரிக்கப்பட்ட அலுமினியம், மின்சாரம், எண்ணெய்-எரிவாயு, இரும்பு-எஃகு ஆகிய நான்கு நிறுவனங்களும் கடந்த ஜூன் மாதத்தில் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.

முந்தைய செய்தி
குறைபாடுகளை சுட்டிக்காட்டிய அமெரிக்க மருந்து நிர்வாகம்: பதில் அளித்த டாக்டர் ரெட்டீஸ்
அடுத்த செய்தி
தேவை அதிகரிப்பால் உயர்ந்த தாமிரம் விலை - வெள்ளி, அலுமினியம் விலை குறைவு

தொடர்புடைய செய்திகள்