Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இவெகோவின் 89.42% பங்குகள் டாடா வசம்

இவெகோவின் 89.42% பங்குகள் டாடா வசம்

இவெகோ நிறுவனம் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமாகியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இத்தாலியின் வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனமான இவெகோவின் 89.42 சதவீதப் பங்குகளை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றியுள்ளது. எஞ்சிய பங்குதாரர்களுக்காக நவம்பர் 2 முதல் 6 வரை பங்கு கொள்முதல் சலுகை மீண்டும் திறக்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான டிஎம்எல் சிவி ஹோல்டிங்ஸ் மூலம் இந்தக் கையகப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்ட பங்கு பரிவர்த்தனைக்கான பணப்பட்டுவாடா அக்டோபர் 30 அன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இவெகோ நிறுவனம் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமாகியுள்ளது.


நிறுவனத்தின் வசமுள்ள சொந்தப் பங்குகளை நீக்கிய கணக்கீட்டில், டாடாவின் பங்கு உரிமை 89.42 சதவீதமாக உள்ளது. இன்னும் 10.58 சதவீதப் பங்குகள் பிற பங்குதாரர்களிடம் உள்ளன.


முதல்கட்டத்தில் பங்குகளை விற்க முன்வராத முதலீட்டாளர்கள், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து வர்த்தக நாள் அவகாசத்தைப் பயன்படுத்தலாம். இந்தக் காலத்தில் ஒப்படைக்கப்படும் பங்குகளுக்கான பணம் நவம்பர் 13 அன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கையகப்படுத்தலுக்குப் பிந்தைய நிர்வாக மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், இவெகோவின் நிர்வாக அதிகாரமற்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.பி. பாலாஜி, கிரீஷ் வாக் ஆகியோரும் இயக்குநர் குழுவில் இணைந்துள்ளனர். ஓலோஃப் பெர்சன் தலைமைச் செயல் அதிகாரியாகத் தொடர்கிறார்.


இவெகோ நிறுவனம் லாரிகள், பேருந்துகள், வாகன இயக்க அமைப்புகள் மற்றும் வாகன நிதிச் சேவைகளில் செயல்படுகிறது. ஐரோப்பிய சந்தையில் அதன் வலுவான இருப்பு, டாடா மோட்டார்ஸின் சர்வதேச வர்த்தக வாகனச் செயல்பாடுகளை விரிவுபடுத்த உதவும் அம்சமாக இந்த ஒப்பந்தத்தில் கருதப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு உயர்வு
அடுத்த செய்தி
உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக உயர்ந்த ஆப்பிள்

தொடர்புடைய செய்திகள்