Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

HUL பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடென்ட் அறிவிப்பு

HUL பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடென்ட் அறிவிப்பு

விற்பனை அளவு வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. விதிவிலக்கான இனங்களுக்கு முந்தைய வரிக்குப் பிந்தைய லாபம் 9 சதவீதம் அதிகரித்தது.

பகிரவும் WhatsApp Facebook

ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ.2,796 கோடியாக இருந்தது. விற்பனை 14.8 சதவீதம் உயர்ந்து ரூ.18,037 கோடியை எட்டியது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.2,791 கோடியாகவும், விற்பனை ரூ.15,715 கோடியாகவும் இருந்தன. அப்போது கிடைத்த ரூ.273 கோடி ஒருமுறை வரிச் சலுகையால், தற்போதைய லாப வளர்ச்சி ஏறத்தாழ சமநிலையில் உள்ளது.

விற்பனை அளவு வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. விதிவிலக்கான இனங்களுக்கு முந்தைய வரிக்குப் பிந்தைய லாபம் 9 சதவீதம் அதிகரித்தது.

வீட்டுப் பராமரிப்புப் பிரிவு வருவாய் 21.4 சதவீதம் உயர்ந்து ரூ.6,878 கோடியானது. அழகு மற்றும் நல்வாழ்வுப் பிரிவு வருவாய் 15.72 சதவீதம் அதிகரித்து ரூ.4,319 கோடியை எட்டியது.

தனிநபர் பராமரிப்புப் பிரிவு வருவாய் 7.9 சதவீதமும், உணவுப் பிரிவு வருவாய் 8.51 சதவீதமும் அதிகரித்தன. மொத்தச் செலவுகள் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.14,574 கோடியாக இருந்தன.

பங்குதாரர்களுக்குப் பங்கு ஒன்றுக்கு ரூ.19 இடைக்கால ஈவுத்தொகை வழங்க நிறுவன இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

முந்தைய செய்தி
இஸ்ரேல் தூதரக காவலரை தாக்கிய இளைஞர் சுட்டுக்கொ*
அடுத்த செய்தி
ஆசிய சந்தைகளில் உற்சாகம் - ஐரோப்பாவில் சரிவு

தொடர்புடைய செய்திகள்