Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இஸ்ரேல் தூதரக காவலரை தாக்கிய இளைஞர் சுட்டுக்கொ*

இஸ்ரேல் தூதரக காவலரை தாக்கிய இளைஞர் சுட்டுக்கொ*

நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

செர்பியாவில் இஸ்ரேல் தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரை கத்தியால் தாக்கிய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேடில் இஸ்ரேல் தூதரகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு வந்த ஒரு இளைஞர், தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியை கத்தியால் குத்தினார். 


காவலாளியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.


தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் உடனடியாகத் தெரியவரவில்லை. இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதி விசாரித்து வருவதாக உள்துறை அமைச்சர் இவிகா டாசிச் தெரிவித்தார். இதையடுத்து, நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் எச்சரிக்கை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.


முக்கிய இடங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தூதரகத்துக்கு வெளியே காவலரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


தாக்குதலைத் தொடர்ந்து முக்கிய பகுதிகளில் கூடுதல் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். நாட்டின் பாதுகாப்பு எச்சரிக்கை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பும் தற்போது வலுப்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ஆட்டோ கட்டண உயர்வு - CM விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் சங்கத்தினர்
அடுத்த செய்தி
HUL பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடென்ட் அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்