Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்செக்ஸ் 1,109 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 1,109 புள்ளிகள் உயர்வு

ஹெச்யுஎல், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவையும் உயர்வுக்கு உதவின.

பகிரவும் WhatsApp Facebook

தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் எஃப்எம்சிஜி நிறுவனப் பங்குகளில் ஏற்பட்ட வலுவான வாங்குதலால் இந்தியப் பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை எழுச்சி கண்டன. சென்செக்ஸ் 1,109 புள்ளிகள் உயர்ந்தது; நிஃப்டி 22,720 புள்ளிகளைக் கடந்து நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,109.10 புள்ளிகள், அதாவது 1.54 சதவீதம் உயர்ந்து 73,033.78 புள்ளிகளில் நிலைபெற்றது. இது கடந்த நான்கு மாதங்களில் பதிவான அதிகபட்ச ஒருநாள் உயர்வாகும். வர்த்தகத்தின்போது குறியீடு 73,045.67 புள்ளிகளைத் தொட்டது.


தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 358.60 புள்ளிகள் அல்லது 1.60 சதவீதம் அதிகரித்து, அன்றைய உச்சமான 22,721.95 புள்ளிகளில் நிறைவடைந்தது. இரண்டு மாதங்களுக்கும் மேலான காலத்தில் அதன் மிகப்பெரிய ஒருநாள் மீட்சியாக இது அமைந்தது.

ஜூலை–செப்டம்பர் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 21.18 சதவீதம் உயர்ந்து ரூ.5,132 கோடியை எட்டியதாக அறிவித்த ஹெச்சிஎல் டெக் பங்கு 8.28 சதவீதம் உயர்ந்தது. டிசிஎஸ் 6.59 சதவீதமும், டெக் மஹிந்திரா 4.90 சதவீதமும், இன்ஃபோசிஸ் 4.44 சதவீதமும் ஏற்றம் கண்டன.

ஹெச்யுஎல், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவையும் உயர்வுக்கு உதவின. கோட்டக் மஹிந்திரா வங்கி, எட்டர்னல், மாருதி பங்குகள் சரிந்தன.

நீண்டகால மூலதன ஆதாய வரி மற்றும் பத்திரப் பரிவர்த்தனை வரி குறித்த விவாதங்களைக் கவனமாகக் கேட்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததும் சந்தை நம்பிக்கையை வலுப்படுத்தியது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சுமார் 41 காசுகள் உயர்ந்து 95.37 ஆக இருந்தது. தொடர்ந்து மூன்றாவது அமர்வாக ரூபாய் வலுப்பெற்றது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.66 சதவீதம் குறைந்து பீப்பாய்க்கு 104.6 டாலராக இருந்தது.

பிஎஸ்இ மிட்கேப் செலக்ட் குறியீடு 0.89 சதவீதம் உயர்ந்தபோதிலும், ஸ்மால்கேப் செலக்ட் 0.26 சதவீதம் சரிந்தது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.1,708.48 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருந்தனர்.

எதிர்பார்ப்பைவிட வலுவான தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபம், ரூபாயின் நிலைத்தன்மை, பத்திர வருவாய் குறைவு ஆகியவை முதலீட்டாளர் மனநிலையை மேம்படுத்தியதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

துறைவாரியாக பிஎஸ்இ ஐடி குறியீடு 4.92 சதவீதமும், ரியால்டி 2.48 சதவீதமும் உயர்ந்தன. ஆசியாவில் தென்கொரியாவின் கோஸ்பி 5.46 சதவீதம் வீழ்ந்தது; ஜப்பான் சந்தையும் சரிந்தது. ஷாங்காய், ஹாங்காங் சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. திங்கள்கிழமை சென்செக்ஸ் 547.65 புள்ளிகளும், நிஃப்டி 157.10 புள்ளிகளும் சரிந்திருந்தன. அமெரிக்கச் சந்தைகள் திங்கள்கிழமை பெரும்பாலும் சரிவுடன் நிறைவடைந்தன.

முந்தைய செய்தி
HCL Tech பங்குகள் 8 சதவீதம் உயர்வு - AI செயல்பாடுகளில் அதிக லாபம்
அடுத்த செய்தி
ஹெச்டி ஃபயர் புரொடெக்ட் ஐபிஓ

தொடர்புடைய செய்திகள்