Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விப்ரோ சந்தை மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடி

விப்ரோ சந்தை மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடி

வர்த்தகத்தின்போது அதிகபட்சமாக ரூ.185.50-ஐ தொட்டது. தேசிய பங்குச்சந்தையில் 5.94 சதவீதம் உயர்ந்தது.

பகிரவும் WhatsApp Facebook

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் காலாண்டு வருவாய் 9.1 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதன் பங்கு விலை 6 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தையில் விப்ரோ பங்கு 6.16 சதவீதம் உயர்ந்து ரூ.184.40-க்கு நிறைவடைந்தது. வர்த்தகத்தின்போது அதிகபட்சமாக ரூ.185.50-ஐ தொட்டது. தேசிய பங்குச்சந்தையில் 5.94 சதவீதம் உயர்ந்தது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10,600.41 கோடி அதிகரித்து ரூ.1,82,654.52 கோடியாக உயர்ந்தது.

நடப்பு நிதியாண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் விப்ரோவின் செயல்பாட்டு வருவாய் 9.1 சதவீதம் உயர்ந்து ரூ.24,752.7 கோடியாக இருந்தது. இருப்பினும், நிகர லாபம் 1.40 சதவீதம் குறைந்து ரூ.3,200.6 கோடியாக பதிவானது.

முந்தைய செய்தி
டெக் மஹிந்திரா சந்தை மதிப்பு ரூ.13,670 கோடி அதிகரிப்பு
அடுத்த செய்தி
PNB வங்கிக்கு ரூ.5,532 கோடி லாபம்

தொடர்புடைய செய்திகள்