Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி Q2 லாபம் 42% உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி Q2 லாபம் 42% உயர்வு

கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.597 கோடியாக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் 42.09 சதவீதம் அதிகரித்து ரூ.451 கோடியாக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியைத் தலைமையிடமாக கொண்ட தனியார் வங்கியான, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, 631 கிளைகளுடன் 53 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் நேற்று இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டார். 


அதில் கூறியிருப்பதாவது: கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.318 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.செப்டம்பர் காலாண்டில் நிகர வட்டி வருவாய் 35.17 சதவீதம் அதிகரித்து ரூ.807 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.597 கோடியாக இருந்தது.


வங்கியின் மொத்த வணிகம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 27.25 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வங்கி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதற்குப் பிறகு பதிவான அதிகபட்ச ஆண்டு வளர்ச்சி இதுவாகும்.


வங்கியின் மொத்தக் கடன்கள் 29.32 சதவீதம் அதிகரித்து ரூ.60,691 கோடியாக உயர்ந்துள்ளன. வைப்புத்தொகை 25.49 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.69,546 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம் (ஜிஎன்பிஏ) கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 0.61 சதவீதமாகக் குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதமும் கடந்த ஆண்டு இதே காலாண்டின் 0.26 சதவீதத்திலிருந்து 0.14 சதவீதமாகச் சரிந்துள்ளது.


வங்கியின் மூலதனப் போதுமான விகிதம் (சிஆர்ஏஆர்) கடந்த ஆண்டின் 30.96 சதவீதத்திலிருந்து 32.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. வங்கியின் நிகர மதிப்பு ரூ.9,444 கோடியிலிருந்து ரூ.10,769 கோடியாக உயர்ந்துள்ளது. இது 14.03 சதவீத வளர்ச்சியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
தனலட்சுமி வங்கியின் லாபம் இரட்டிப்பானது
அடுத்த செய்தி
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் தொடரும்: ஆய்வாளர் ஹேமங் கோர்

தொடர்புடைய செய்திகள்