Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு உயர்வு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு உயர்வு

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.2,62,935 கோடியை எட்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாவது காலாண்டு நிகர லாபம் ரூ.21,630 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.7,610 கோடியாக இருந்தது. எரிபொருட்களின் சில்லறை விலை உயர்வும், மானிய விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்ததற்கான அரசின் இழப்பீடும் லாப அதிகரிப்புக்கு உதவியுள்ளன.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.2,62,935 கோடியை எட்டியுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்த செயல்பாட்டு லாபம், முந்தைய ஆண்டின் ரூ.11,268 கோடியிலிருந்து ரூ.24,935 கோடியாக உயர்ந்துள்ளது. எரிவாயு வணிகத்தின் செயல்பாட்டு லாபமும் ரூ.243 கோடியிலிருந்து ரூ.1,237 கோடியாக அதிகரித்துள்ளது.


ஜூன் நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட தற்காலிகச் சரிவும், பெட்ரோகெமிக்கல் மற்றும் எரிவாயு வணிகங்களில் கிடைத்த வலுவான லாப வரம்புகளும் காலாண்டு செயல்திறனை மேம்படுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் காலாண்டில் உயர்த்தப்பட்ட எரிபொருள் விலைகள், செப்டம்பர் காலாண்டில் மாற்றமின்றித் தொடர்ந்தன.


ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் பிரென்ட் கச்சா எண்ணெயின் சராசரி விலை பீப்பாய்க்கு 96.3 டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட சுமார் 40 சதவீதம் அதிகம்; முந்தைய காலாண்டைவிட சுமார் ஏழு சதவீதம் குறைவு.

 ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்த ஜூன் காலாண்டில், நிறுவனம் ரூ.2,661 கோடி நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது. வெள்ளிக்கிழமை நிறுவனத்தின் பங்குகள் ரூ.130 என்ற அளவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

முந்தைய செய்தி
விதிமுறைகளை மீறிய 467 தொழிற்சாலைகள் மூடல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
அடுத்த செய்தி
இவெகோவின் 89.42% பங்குகள் டாடா வசம்

தொடர்புடைய செய்திகள்