Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வேதாந்தா நிறுவனத்தின் லாபம் 151% உயர்வு

வேதாந்தா நிறுவனத்தின் லாபம் 151% உயர்வு

செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.6,202 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

உலக சந்தையில் அடிப்படை உலோகங்களின் விலை உயர்ந்துள்ளதால், வேதாந்தா நிறுவனத்தின் லாபம் கணிசமாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 151 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி சுரங்க மற்றும் உலோக உற்பத்தி நிறுவனமான வேதாந்தா, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ரூ.6,202 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.2,471 கோடியாக இருந்தது.


இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருண் மிஸ்ரா தெரிவித்ததாவது: துத்தநாகம், தாமிரம் உள்ளிட்ட அடிப்படை உலோகங்களின் விலை உயர்வு நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதனால் நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57 சதவீதம் உயர்ந்து ரூ.25,812 கோடியை எட்டியுள்ளது. லாப வளர்ச்சியுடன் நிறுவனத்தின் கடன் சுமையைக் குறைப்பதிலும் வேதாந்தா கவனம் செலுத்தி வருகிறது. செப்டம்பர் காலாண்டில் மட்டும் சுமார் ரூ.9,584 கோடி கடனைக் குறைத்துள்ளது .


மேலும், உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் நடப்பு நிதியாண்டில் ரூ.6,500 கோடி மூலதனச் செலவு மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் முதலீட்டை ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக உயர்த்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. உலோகச் சந்தையில் நிலவும் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, உற்பத்தியை விரிவுபடுத்துவதுடன் கடன் சுமையையும் குறைக்க வேதாந்தா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
பங்குதாரர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி வழங்கும் தென்கொரிய நிறுவனம்
அடுத்த செய்தி
தங்கப் பத்திரத்தில் 208.54% லாபம்

தொடர்புடைய செய்திகள்