Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பங்குதாரர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி வழங்கும் தென்கொரிய நிறுவனம்

பங்குதாரர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி வழங்கும் தென்கொரிய நிறுவனம்

ஏஐ வளர்ச்சியால் அதிகரித்த லாபம்

பகிரவும் WhatsApp Facebook

தென்கொரிய நிறுவமனமான எஸ்கே ஹைனிக்ஸ் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் வரலாறு காணாத லாபம் ஈட்டியுள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் தனது பங்குதாரர்களுக்கு சுமார் ரூ. 7 லட்சம் கோடி வழங்க தென்கொரிய நிறுவனம் முடிவு செய்துள்ளது.


செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால், உலக அளவில் செமிகண்டக்டர் சிப்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தென்கொரியாவின் முன்னணி மெமரி சிப் தயாரிப்பு நிறுவனமான எஸ்கே ஹைனிக்ஸ் அதிக லாபம் ஈட்டியுள்ளது. எஸ்கே ஹைனிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கை: 


 இதுவரை இல்லாத அளவுக்கு வருவாயும் செயல்பாட்டு லாபமும் உயர்ந்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 83.33 டிரில்லியன் வான் (கொரிய நாட்டு நாணயம்) ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 11.38 டிரில்லியன் வானாக இருந்தது. செயல்பாட்டு லாபம் சுமார் 632 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல், நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 104.62 டிரில்லியன் வானாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 328 சதவீதம் அதிகமாகும். நிறுவனத்தின் வரலாற்றிலேயே காலாண்டு வருவாய் 100 டிரில்லியன் வானைத் தாண்டியிருப்பது இதுவே முதல்முறையாகும்.நிகர லாபமும் கடந்த ஆண்டைவிட சுமார் 216 சதவீதம் உயர்ந்து 39.78 டிரில்லியன் வானை எட்டியுள்ளது. 

இதனால், தனது பங்குதாரர்களுக்கு 7,500 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பலன்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி, 2026-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 30 டிரில்லியன் வான் ரொக்கப் பங்காதாயமாக வழங்கப்படும். மேலும், குறைந்தபட்சம் 60 டிரில்லியன் வான் மதிப்பிலான சொந்தப் பங்குகளைத் திரும்ப வாங்கி ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட 40 டிரில்லியன் வான் பங்குகளைத் திரும்ப வாங்கும் நடவடிக்கை ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. அந்தப் பங்குகள் விரைவில் ரத்து செய்யப்பட உள்ளன. மேலும், 3-வது காலாண்டுக்காக ஒரு பங்குக்கு 20 ஆயிரம் வான் பங்காதாயம் வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 10 ஆயிரம் வான் வழக்கமான பங்காதாயமாகவும், மீதமுள்ள 10 ஆயிரம் வான் சிறப்புப் பங்காதாயமாகவும் வழங்கப்படும்.

ஜப்பானைச் சேர்ந்த கியோக்ஸியா நிறுவனத்தில் மேற்கொண்ட முதலீட்டால், கிடைத்த லாபத்தின் பெரும்பகுதியையும் பங்குதாரர்களுடன் பகிர்ந்துகொள்ள எஸ்கே ஹைனிக்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த ரூ.7 லட்சம் கோடி முழுவதும் நேரடியாக ரொக்கமாக வழங்கப்படுவதில்லை. 

பங்காதாயம், பங்குகளைத் திரும்ப வாங்கி ரத்து செய்வதால், பங்குதாரர்களுக்குப் பலன்கள் வழங்கப்படுகின்றன.அதிகரித்து வரும் தேவையைச் சமாளிக்க, அடுத்த ஆண்டில் சிப் உற்பத்திக்கான முதலீடுகளை கணிசமாக உயர்த்த எஸ்கே ஹைனிக்ஸ் திட்டமிட்டுள்ளது.
தென்கொரியாவின் யோங்கின் பகுதியில் அமைக்கப்படும் புதிய சிப் தயாரிப்பு ஆலை, அடுத்த ஆண்டு முழு அளவிலான செயல்பாட்டைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
நவம்பர் 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: நாளை எப்படி?
அடுத்த செய்தி
வேதாந்தா நிறுவனத்தின் லாபம் 151% உயர்வு

தொடர்புடைய செய்திகள்