Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிறிய பங்குகளில் பெரிய சரிவு - எச்சரிக்கை அவசியம்

சிறிய பங்குகளில் பெரிய சரிவு - எச்சரிக்கை அவசியம்

சந்தை சொல்லும் செய்தி என்ன?

பகிரவும் WhatsApp Facebook

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்க அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுத்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் வினோத் நாயர் தெரிவித்துள்ளார்.

விடுமுறையால் வர்த்தக நாள்கள் குறைந்திருந்த கடந்த வாரத்திலும், இந்தியப் பங்குச்சந்தையில் சோதனைகள் குறையவில்லை. கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்ததும், உள்நாட்டுக் கடன் பத்திர வருவாய் விகிதங்கள் அதிகரித்ததும் முக்கியக் குறியீடுகளின் சரிவை நீட்டித்தன.


நிறுவனங்களின் உறுதியான இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகள்கூட சந்தையைத் தாங்கிப்பிடிக்கப் போதவில்லை. உயர்ந்த மதிப்பீடுகள் குறித்த கவலைகளும், கடன் நிதியில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் கலைக்கப்பட்டதும், நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளைக் கடுமையாகப் பாதித்தன. பெரிய நிறுவனப் பங்குகள் ஒப்பீட்டளவில் தாக்குப்பிடித்தன.
இந்த சரிவுக்கு மத்தியில், தகவல் தொழில்நுட்பத் துறை மட்டும் ஆறுதல் அளித்தது. 

வருவாய் எதிர்பார்ப்புகளில் தெளிவு ஏற்பட்டதால், தொடக்கச் சரிவிலிருந்து மீண்டு, வாரத்தைப் பெரும்பாலும் மாற்றமின்றி நிறைவு செய்தது. நுகர்வோர் பயன்பாட்டுப் பொருள்கள், உலோகங்கள், ரியல் எஸ்டேட் துறைகளில் விற்பனை அழுத்தம் அதிகரித்தது.
அடுத்த வாரம் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகள் சந்தையின் கவனத்தை ஈர்க்கும். மேற்கு ஆசிய நிலவரம் எண்ணெய் விலையையும், அதன் வழியாக ரூபாய் மதிப்பு மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகளையும் பாதிக்கும்.


உள்நாட்டில் தொழில்துறை உற்பத்தித் தரவுகள், நிறுவன நிதி முடிவுகள், இந்தியா–அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் ஆகியவை முக்கியமாக இருக்கும்.
கடன் பத்திர வருவாய் விகிதங்கள் உயர்ந்திருப்பதால் வெளிநாட்டு முதலீட்டு வரத்தும் மந்தமாக நீடிக்கலாம். நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி பல்வேறு துறைகளுக்கும் பரவுகிறதா என்பதையும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.


“வருவாய் தெளிவும் நியாயமான மதிப்பீடும் கொண்ட பங்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.மதிப்பீடு மற்றும் கடன் முதலீட்டின் அதிகப்படியான நிலைகள் சீரடையும் வரை பரந்த சந்தையில் எச்சரிக்கை அவசியம்” என்பதே வினோத் நாயரின் அறிவுரை.

முந்தைய செய்தி
டிவிடெண்ட், உரிமைப் பங்கு, பங்கு பிரிப்பு - பதிவுத் தேதி அறிவிப்பு
அடுத்த செய்தி
சாதனைகளை உடைத்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ

தொடர்புடைய செய்திகள்