Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்க வெளி மாவட்டத்தினருக்குத் தடை

கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்க வெளி மாவட்டத்தினருக்குத் தடை

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வடகிழக்கு பருவமழை காலங்களில் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்ட மீனவர்கள் வந்து மீன்பிடி தொழில் செய்வது வழக்கம்.

பகிரவும் WhatsApp Facebook

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வெளியூர் மீனவர்கள் உடனடியாக வெளியேற மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளதால் அங்குள்ள வெளியூர் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வடகிழக்கு பருவமழை காலங்களில் தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்ட மீனவர்கள் வந்து மீன்பிடி தொழில் செய்வது வழக்கம். கடந்த 70 ஆண்டு காலத்திற்கும் மேலாக இது வழக்கத்தில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றின்போது வெளி மாவட்ட மீனவர்கள் குறைந்த அளவே வந்தனர். நிலைமை சரியானதும் வெளிமாவட்ட மீனவர்கள் இங்கு வரத் தொடங்கினர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கோடியக்கரையில் தங்கி மீன்பிடி தொழில் செய்வதற்காக வெளி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் தங்கள் படகுகளோடு வந்துள்ளனர்.
உள்ளூர் மீனவர்களுக்கும் வெளி மாவட்ட மீனவர்களுக்கும் பிரச்சனை நீடித்து வருவதால், அசம்பாவிதங்களை தடுக்க வெளி மாவட்ட மீனவர்கள் கோடியக்கரையை விட்டு படகுகளோடு உடனடியாக வெளியேற வேண்டும் என்று மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் வெளியூர் மீன்பிடி படகுகளில் ஒட்டப்பட்டுள்ளது.
வெளி மாவட்டத்தை சேர்ந்த படகுகள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழில் செய்தால் வேதாரண்யம் வட்ட மீனவர்கள் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது. மேலும், இவ்வறிவிப்பை மீறி கோடியக்கரையில் தங்கி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு படகுகளில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
Azhagar temple offerings exceed ₹46 lakhs
அடுத்த செய்தி
Theni district gets new Collector

தொடர்புடைய செய்திகள்