Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு: 3.97 லட்சம் பேர் எழுதினர்

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு:  3.97 லட்சம் பேர் எழுதினர்

மொத்தமுள்ள 846 பணியிடங்களில், குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு அடிப்படையில் 43 பேரும், குரூப் 2ஏ பிரிவில் நேர்முகத் தேர்வு இல்லாமல் 803 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வை எழுத 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3,97,293 பேர் தேர்வு எழுதினர். 92 ஆயிரத்து 595 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதற்காக தமிழகம் முழுவதும் 1,647 மையங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 173 மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய தேர்வு நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.

மொத்தமுள்ள 846 பணியிடங்களில், குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு அடிப்படையில் 43 பேரும், குரூப் 2ஏ பிரிவில் நேர்முகத் தேர்வு இல்லாமல் 803 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார்பதிவாளர், துணை வணிக வரி அலுவலர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இதில் அடங்கும்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெற்று, அடுத்தகட்ட தேர்வு நடைமுறைகளை நிறைவு செய்பவர்கள் அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.



முந்தைய செய்தி
உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால் நிலக்கரி இறக்குமதி 5.83% சரிவு
அடுத்த செய்தி
கைதிகள் தப்பியோடிய விவகாரம்: சிறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

தொடர்புடைய செய்திகள்