Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சர்வதேச ஆடை வர்த்தகக் காட்சியில் பங்கேற்க அழைப்பு

சர்வதேச ஆடை வர்த்தகக் காட்சியில் பங்கேற்க அழைப்பு

2025-ல் இந்தியாவிலிருந்து பிரான்ஸுக்கு 638 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜனவரி 16 முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச ஆடை வர்த்தகக் கண்காட்சியில் (WHO’S NEXT SOURCING & SOLUTIONS) பங்கேற்க இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (AEPC) அழைப்பு விடுத்துள்ளது.

பாரிஸில் நடைபெறும் இக்கண்காட்சியில் பெண்களுக்கான ஆடைகள், பின்னலாடைகள், தோல் ஆடைகள், கைப்பைகள், உள்ளாடைகள், காலணிகள், வீட்டு உபயோகத் துணிகள் உள்ளிட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்தலாம்.

2025-ல் இந்தியாவிலிருந்து பிரான்ஸுக்கு 638 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏழாவது பெரிய ஆடை ஏற்றுமதிச் சந்தையாக பிரான்ஸ் விளங்குகிறது. இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இச்சந்தையில் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தக் கண்காட்சி உதவும் என AEPC தெரிவித்துள்ளது.

9 சதுர மீட்டர் அரங்குக்கு ரூ.4.27 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15-க்குள் முன்பதிவு செய்தால் ரூ.10,000 சலுகையுடன் ரூ.4.17 லட்சம் செலுத்தலாம். 6 மாதங்களுக்கும் குறைவான RCMC வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் ரூ.6.62 லட்சம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 15. கூடுதல் விவரங்களுக்கு www.aepcindia.com இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
புதிய ஷீட் மாஸ்க் அறிமுகப்படுத்திய ராகா புரொஃபஷனல்
அடுத்த செய்தி
மின்சார கொள்முதல் மறு டெண்டரில் விலைப்புள்ளி 20% குறைவு: நிர்மல் குமார்

தொடர்புடைய செய்திகள்