Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மின் பயன்பாட்டைக் கண்காணிக்க புதிய செயலி

மின் பயன்பாட்டைக் கண்காணிக்க புதிய செயலி

இதன் மூலம் நுகர்வோர் தங்களின் மின் பயன்பாடு மற்றும் செலவுகளை நேரம், நாள், வாரம், மாதம், ஆண்டு, பருவகால வாரியாகக் கண்காணிக்க முடியும்.

பகிரவும் WhatsApp Facebook

மின் நுகர்வோர் மின் பயன்பாடு மற்றும் கட்டணங்களை உடனுக்குடன் கண்காணிக்க உதவும் புதிய மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை அறிமுகப்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது.

மின்கட்டண உயர்வு, அதிக மின் பயன்பாடு குறித்து மின் நுகர்வோர் புகார்கள் தெரிவித்து வரும் நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை
கொண்டுவரப்பட உள்ளது.

இதன் மூலம் நுகர்வோர் தங்களின் மின் பயன்பாடு மற்றும் செலவுகளை நேரம், நாள், வாரம், மாதம், ஆண்டு மற்றும் பருவகால வாரியாகக் கண்காணிக்க முடியும். மேலும், மின்கட்டணங்களைச் செலுத்துதல், மின் தடை மற்றும் பழுதான மீட்டர்கள் குறித்துப் புகாரளித்தல், புதிய இணைப்புகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளையும் இந்தச் செயலி வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.

முன்பணம் செலுத்தும் முறை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்கான இருப்புத் தொகை, தினசரி பயன்பாடு மற்றும் ரீசார்ஜ் வரலாற்றைக் கண்காணிக்கும் வசதிகளும் இதில் இடம்பெறும்.

 தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தச் சேவை செயல்படும் என்றும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகள் மூலம் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பெருநகரப் பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்த அழுத்த மின் நுகர்வோருக்கான ஸ்மார்ட் மீட்டர்

திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
4,700 ஆண்டுகள் பழமையான கப்பல் சிதைவுகள் - எங்கு தெரியுமா?
அடுத்த செய்தி
2027-ல் 9.1% சம்பள உயர்வுக்கு வாய்ப்பு - எந்தெந்த துறைகள்?

தொடர்புடைய செய்திகள்