Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புதிய ஷீட் மாஸ்க் அறிமுகப்படுத்திய ராகா புரொஃபஷனல்

புதிய ஷீட் மாஸ்க் அறிமுகப்படுத்திய ராகா புரொஃபஷனல்
ராகா புரொஃபஷனல் டி-டான் ஷீட் மாஸ்க்

சருமப் பராமரிப்பில் சலூன்களில் வழங்கப்படும் அனுபவத்தை வீட்டிலேயே பெறும் வகையில் இந்தப் புதிய ஷீட் மாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கவின்கேர் நிறுவனத்தின் ராகா புரொஃபஷனல் பிராண்ட், வீட்டிலேயே சருமப் பராமரிப்பு மேற்கொள்ளும் வகையில், ரூ.150 விலையில் புதிய டி-டான் ஷீட் மாஸ்க்கைஅறிமுகப்படுத்தி உள்ளது. கோஜிக் அமிலம், பால் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பொருள், நைகாலேண்ட் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் நைகா (Nykaa) இணையதளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

சருமப் பராமரிப்பில் சலூன்களில் வழங்கப்படும் அனுபவத்தை வீட்டிலேயே பெறும் வகையில் இந்தப் புதிய ஷீட் மாஸ்க் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கவின்கேர் நிறுவனத்தின் புதிய முயற்சிகள் மற்றும் மின்னணு வணிகப் பிரிவு இயக்குநர் அமுதவல்லி ரங்கநாதன் தெரிவித்தார்.

நுகர்வோரின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, தொழில்முறை சருமப் பராமரிப்புத் தீர்வுகளை அன்றாட வாழ்க்கையில் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ராகா புரொஃபஷனல் பிராண்டின் வணிகப் பிரிவு தலைவர் அஷ்ரித் பட்டநாயக் கூறுகையில், சலூன்களில் டி-டான் சருமப் பராமரிப்பை பிரபலப்படுத்துவதில் இந்நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும், புதிய ஷீட் மாஸ்க் மூலம் அந்தப் பராமரிப்பை வீட்டுக்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சருமப் பராமரிப்புப் பொருட்களை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் புதிய வடிவங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம், வீட்டுப் பயன்பாட்டுக்கான அழகுப் பராமரிப்புச் சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்த ராகா புரொஃபஷனல் திட்டமிட்டுள்ளது.

முந்தைய செய்தி
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த பொதுமக்கள்
அடுத்த செய்தி
சர்வதேச ஆடை வர்த்தகக் காட்சியில் பங்கேற்க அழைப்பு

தொடர்புடைய செய்திகள்